எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய சமூகநீதி இயக்கத்தின் நிறு வனர் -  தலைவர் பேராயர் எஸ்றா.சற்குணம் அவர்களின் உணர்ச்சியூட்டும் கடிதம் இதோ!

சமீப காலத்தில் அமெரிக்க அய்க்கிய நாட்டிற்கு எனது நெடுநாளைய நண்பர், உலகப் பிரசித்திப்பெற்ற டாக்டர் பில்லி கிரஹாம் அவர்களின் மறைவினை முன்னிட்டு ஒரு அவசர பயணம் மேற் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தால் தந்தை பெரியார் அவர் களுக்கு எதிராக சில விஷமிகள் செய் திட்ட அநாகரீக செயல்களை தட்டிக் கேட்கின்ற வகையில் நடந்திட்ட ஆர்ப் பாட்டங்களில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை எனக்கு உண்டாயிற்று. இதனால் தாயகம் திரும்பி வந்துள்ள நிலையில் குறைந்தபட்சம் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை இட்டும், அவர்களுடைய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்திட வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பும் எனக்கு ஏற்பட்டது. அதனை நிறைவேற்றுகின்ற வகையில் அந்த கடமையை செய்திடும் நல்வாய்ப் பினைப் பெற்றேன். இது தந்தை பெரியார் அவர்களுக்கு நான் செய்யும் ஒரு பிராயச்சித்தமாகவும், அந்த மகானுக்கு கடமை உணர்வோடு நான் செய்திடும் வீரவணக்கமாகவும் கருதுகின்றேன்.

உலக வரலாற்றிலேயே கத்தி இன்றி, ரத்தம் இன்றி மாபெரும் சமூகப்புரட்சியை ஏற்படுத்திய சமூக புரட்சியாளர்களில் முதன்மையான இடத்தை பிடித்துக் கொண்டு இருப்பவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியார் அவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையை, நன்றிக் கடனைச் செய்ய தவறுபவர்கள் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அதைவிட குறிப்பாக நாம் தன்மானத்தோடு வாழ்ந்திட பெரியார் அவர்கள் செய்திட்ட வரலாற்று மிக்க சமூகப் புரட்சியினை கொச்சைப்படுத்திட, காயப்படுத்திட நினைக்கிறவர்கள் சமு தாயத்திற்கு எதிராக மன்னிக்கப்படாத மாபெரும் குற்றத்தை செய்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதனை நான் இங்கே சொல்லி ஆகவேண்டும்.

வெகு தூரத்தில் இருந்து நான் கேள்விப்பட்ட, ஊடகங்கள் வாயிலாக அறிந்திட்ட அந்த அதிர்ச்சியான செய் திகள் எல்லாம் எனது மனதில் பல சங்கடங்களை ஏற்படுத்தின. எச். ராஜா என்பவர் அந்த மாபெரும் சமூக புரட் சியாளருக்கு எதிராகப் பேசிய காரி யங்கள் இன்னும் மற்றும் சில விஷமிகள் தந்தை பெரியாரின் சிலையை சேதப் படுத்திய சம்பவங்கள் எல்லாம் மன்னிக் கப்படக்கூடாத தவறுகள் ஆகும். தந்தை பெரியார் அவர்கள் தேய்க்க தேய்க்க ஒளிர்விடுபவர். அடிக்க அடிக்க உயரப் பறக்கும் பந்து போன்றவர். அவ ருடைய புகழை யாராலும் மறைத்துவிட முடியாது. அவ்வாறு அவரை ஊனப்படுத்த, குற்றப்படுத்த நினைக்கும் கீழ்மக்கள் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடு வார்கள். தந்தை பெரியாரின் புகழ், பத்தரை மாற்றுத் தங்கத்தைப் போல் ஒளிவிட்டுக்கொண்டிருக்கும். அவரது புகழ் என்றும் ஒங்குக!

எனவே தாயகம் திரும்பியதும் தந்தை பெரியார் அவர்களுக்கு மரி யாதை செய்கின்ற வகையில் பெரியார் திடலுக்கு விரைந்து அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களையும், திரு.பூங் குன்றன் அவர்களையும் சந்தித்து எனது வருத்தங்களைத் தெரிவித்து எனது கடமையை நிறைவேற்றினேன்.

தந்தை பெரியார் அவர்கள் செய் திட்ட மாபெரும் புரட்சிகள் காலத்தால் என்றும் அழிக்கப்பட முடியாதவை, அகற்றப்பட முடியாதவைகள்.

இந்தியாவின் இரண்டு மகாத் மாக்களில் ஒருவர் மகாத்மா பூலே. அடுத்தவர் மகாத்மா தந்தை பெரியார் என்பதை இங்கே கோடிட்டு காட்ட விரும்புகிறேன். தந்தை பெரியார் புகழ் ஓங்குக! அவரது சமூகப் புரட்சி ஓங்குக!

- பேராயர் எஸ்றா சற்குணம்

தலைவர், இந்திய சமூகநீதி இயக்கம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner