எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் (ஓய்வு)  மு. செந்தமிழ்ச்செல்வன், காவல் துறை கூடுதல் இயக்குநர் (ADGP)
மு. இரவி வளர்மதி, மணிமேகலை ஆகியோரின் தந்தையாரும், மேனாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் மாமனாரும், சுயமரியாதை வீரருமான ஒட்டன்சத்திரம்  மானமிகு கா. முத்துச்சாமி அவர்கள் 14.4.2019 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

பெரியவர் முத்துசாமி திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் பகுதியில் நடக்கும் நமது இயக்க நிகழ்ச்சிக்கெல்லாம் வரத் தவறாதவர். சென்னையில்பெரியார்திடலுக்கு வந்து இயக்க நூல்களை  வாங்கிச் செல்லக் கூடிய கொள்கை ஆர்வலர்.  அவர் பிரிவு நமக்குப் பெரும் துயரத்தைத் தருகிறது. அவர்தம் பிரிவால் துயருறும் குடும் பத்தினர்க்கும், உற்றார் உறவினருக்கும், கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். திண்டுக்கல் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆர். வீரபாண்டி தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.

- கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner