எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாராபுரம், ஏப். 15- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பெரியார் பெருந் தொண்டரும், திராவிடர் கழகத்தின் பொதுக்குழு உறுப் பினருமான ப.வடிவேல் (வயது 78) அவர்கள் முதுமையோடு கூடிய உடல்நலக் குறைவினால் 13.4.2019 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் தாராபுரம் தேவேந்திரா தெருவிலுள்ள அவரது இல் லத்தில்  மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தின் தாராபுரம் கழக மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், செயலாளர் க.சண்முகம், அமைப்பாளர் கி.மயில்சாமி, பொதுக்குழு உறுப்பினர் நா.சாமிநாதன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறி ஞர் நா.சக்திவேல், மாவட்ட பகுத்தறிவா ளர் கழக தலைவர் ஆசிரியர் வேலுமணி, கோவை மண்டல இளைஞரணி செயலா ளர் ச.மணிகண்டன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் நா.மாயவன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் நாத்திக சிதம்பரம், தாராபுரம் நகர செயலாளர் இரா. சின்னப்ப தாஸ், தாரை ப.மணி, தாராபுரம் நகர இளைஞரணி தலைவர் ஆ.முனீஸ்வரன், தாரை பு.முருகேஸ் (பக), தாரை மாரி முத்து (பக), கணியூர் பழ.பெரியசாமி (பக), உடுமலை நகர தலைவர் போடி பட்டி க.காஞ்சிமலையன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் பழ.நாகராஜ், மடத்துக் குளம் மா.சிவக்குமார் (தி.தொ.ச), அலங் கியம் புள்ளியான், ஆகியோர் அவரது இல் லம் சென்று இறுதி மரியாதை செலுத்தி, அவரது மகன் வ.காமராஜ் அவர் களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

உயிலும், உடற்கொடையும்

ப.வடிவேல் அவர்கள் "வாழும் போது உறுப்புக்கள் கொடை, இறந்தபின் உடற் கொடை" என்ற திராவிடர் கழகத்தின் கொள்கைக்கேற்ப தான் இறந்த பின் என்னுடைய உடலுக்கு எவ்வித மூடச் சடங்குகளும் செய்யாமல் உடலை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கவேண்டுமென்று உயில் எழுதி வைத்திருந்ததன் பேரில் அவ ரது மகன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையிலும்,ஒத்துழைப்போடும் அவரது உடலுக்கு கழகத்தின் சார்பில் வீரவணக்க முழக்கத்துடன் கழகக் கொடி அணிவிக்கப்பட்டு தாராபுரத்திலிருந்து அவசர ஊர்தி மூலம் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பணியில் இருந்த மருத்து வர் வசம் உரிய ஆவண கோப்புகளுடன் 13.04.2019 சனிக்கிழமை இரவு 10.15 மணிக்கு ப.வடிவேல் அவர்களது உடல் கொடையாக வழங்கப்பட்டது.

நிகழ்வின் போது ப.வடிவேல்  அவர் களது மகன் வ.காமராஜ், கோவை மண் டலச் செயலாளர் ம.சந்திரசேகர், கோவை மாவட்ட தலைவர் சிற்றரசு, கோவை மாவட்ட தோழர்கள் குறிச்சி தமிழ் முரசு, சுந்தராபுரம் இலைகடை செல்வம், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் வெற்றிச் செல்வன், ஆத்துப்பாலம் பொன்ராஜ், ஜீ.டி. நாயுடு நினைவு படிப்பக பொறுப்பாளர் ராஜா மற்றும் தாராபுரம் மாவட்ட கழக தோழர்கள் உடனிருந்தனர்.

இரங்கல் கூட்டம்

பெரியார் பெருந் தொண்டர் ப.வடி வேல் அவர்களது உடல் தாராபுரத்திலி ருந்து கோவை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவுடன் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், கழக ஆதரவாளர்கள், உறவினர் கள், நண்பர்கள் ஆகியோர் பங்கேற்ற இரங்கல் கூட்டம் தாராபுரம் தேவேந்திரா தெரு மய்தானத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட திமுக வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் க.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னாள் திமுக அரசு வழக்குரைஞர் பா.கலைச்செழியன், தாராபுரம் நகர திமுக துணைச் செயலா ளர் ஆ.சக்திவேல், பெரியார் தொண்டர் கள் வழக்குரைஞர் கிருஷ்ணகுமார், அழகப்பன், ராஜாமணி மற்றும் தாரா புரம் மாவட்ட கழகத் தோழர்கள் பங் கேற்று மறைந்த ப.வடிவேல் அவர்கள் தந்தை பெரியார் கொள்கையின் மீது கொண்ட உறுதித் தன்மை பற்றியும், அவர் உடற்கொடை கொடுத்த சமூகப் பாங்கு குறித்தும் பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறி வீரவணக்கம் செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner