எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பெரியார் பெருந்தொண்டரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான மானமிகு. ப.வடிவேல் அவர்கள் (வயது 78) நேற்று (13.4.2019) மாலை 3.30 மணியளவில் தாராபுரத்தில் அவர் இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.  அரசுப் பணியில் இருந்தபோதும், கருஞ்சட்டை வீரராகக் காட்சி அளித்தவர். குடும்பத்தோடு கழக நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்க தவறாதவர். ஓய்வுக்குப் பின் கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் தவறாமல் பங்கேற்றவர். தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட ஒத்துழைத்தவர்.

தாராபுரத்தில் ஒரு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டவுடன் கத்தியுடன் பாய்ந்து எனது அருகில் நின்று பாதுகாத்த காட்சி என் கண் முன்னால் இன்றும் பசுமையாகவே உள்ளது.

மறைந்த பிறகும் தன் உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற தொண்டறச் சிந்தனையோடு அவர் எழுதி வைத்ததைக் குடும்பத்தினர் கழகத் தோழர்களும் முன்னின்று நிறைவேற்றும் வகையில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்றிரவு 10.15 மணியளவில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டர் மானமிகு. ப.வடிவேல் அவர்களின் அரும்பெரும் இயக்கத் தொண்டினை நினைவு கூர்ந்து கழகத்தின் சார்பில் வீரவணக்கத்தை செலுத்துகிறோம். அவர் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக் கும்,  கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

14.4.2019

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner