எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்னவாசல், ஜூலை 3 திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய செயலாளர் அன்னவாசல் அ.மகாலிங்கம் 30.5.2018 அன்று உடல் நலக்குறைவால்  மறை வுற்றார்கள். மறைந்த மகா லிங்கம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி  20.6.2018 அன்று காலை 11 மணியளவில் அன்னவாசல் அவர்களது இல்லத்தில் நடை பெற்றது.

மாவட்டத் தலைவர் இரா.கோபால் தலைமை வகித்து நினைவுரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் படத்தினை திறந்து வைத்து நினைவுரை யாற்றினார். மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், மாவட்டத் துணைத் தலைவர் அருண்காந்தி, மாவட்ட இணைச் செயலாளர் வீர.கோவிந்தராசு, ஆசிரியர் சுப்ரமணியன்,  மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் சாமி நாதன், மயிலாடுதுறை மாவட்ட ப.க.செயலாளர் சாமிதுரை, மாவட்ட விவசாய அணி செய லாளர் இரத்தினசாமி, ஒன்றியத் தலைவர் மணிசேகரன், மாவட்ட துணைச் செயலாளர்  வீரையன்,  திருவாரூர் நகரத் தலைவர் மனோகரன், மாவட்ட ப.க செயலாளர் அசோக்ராஜ் ஆகியோர் நினைவுரையாற்றி னார் கள். நிகழ்வில் ஒன்றிய அமைப்பாளர்  ஜெயராமன், பாண்டியன், சேப்பெருமாள், பாலகிருஷ்ணன், நெய் குப்பை செல்வத்துரை உள்ளிட்ட ஏரா ளமான கழகத் தோழர்கள் உற வினர்கள் கலந்து கொண்டனர். மனைவி இந்திரா, மகன்கள் ஆனந்தராஜ், அருந்தாஸ், மகள் ரேவதி பாலச்சந்திரன் ஆகியோர்  நிகழ்வை ஏற்பாடு செய்திருந் தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner