மஞ்சக்குடி, ஜூலை 3 பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் விவசாய தொழிலாளரணி முன் னாள் மாநில செயலாளர் குட வாசல் கணபதி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 24.6.2018 அன்று மாலை 6 மணியளவில் சேங்காளிபுரம் அவரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த கணபதி அவர்கள் படத்திற்கு கழகப் பொறுப்பா ளர்கள், தோழர்கள் குடும்பத் தார்கள் முன்னிலையில் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
நினைவு நாள் பொதுக் கூட்டம்
24.6.2018 அன்று மாலை 6.30 மணியளவில் மஞ்சக்குடி கடைத் தெருவில் கணபதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. குடவாசல் ஒன் றியத் தலைவர் மணிசேகரன் தலைமை வகித்து உரையாற்றி னார். மாநில விவசாய தொழி லாளரணி செயலாளர் வி.மோகன் மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி பொதுக்குழு உறுப்பினர் வசந்தா கல்யாணி மாவட்ட துணைத்தலைவர் அருண் காந்தி மாவட்ட இணைச் செயலாளர் வீர.கோவிந் தராஜ் மாவட்ட துணைச் செய லாளர் க.வீரையன் ஒன்றிய அமைப்பாளர் ஜெயராமன் ஆகி யோர் முன்னிலையேற்று உரை யாற்றினர். தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் இரத்தின சாமி பெரியார் பிஞ்சு இனியன் ஆகியோர் உரையாற்றினர்.
இரா.ஜெயக்குமார்உரை
கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் மறைந்த கணபதி அவர்களின் அளப்பரிய தொண்டுகள், அவர் முன்னெடுத்த விவசாய தொழிலாளர் போராட்டங்கள் சட்ட போராட்டங்கள் தொழி லாளர்களுக்கான உரிமைகளை பெற்று தருதல் ஜாதி அடக்கு முறைகள் கொடுமைகளுக்கெதி ரான போராட்டங்கள் தந்தை பெரியார் கொள்கையை வென் றெடுக்க தமிழர் தலைவர் தலை மையில் அவர் இயக்கத்தில் கட்டுப்பாடு மிக்க ராணுவ வீர ராக ஆற்றிய பணிகள் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப் புரையாற்றினார். நிறைவாக இரா.வீரமணி நன்றி கூறினார்
நிகழ்வில் மண்டல மகளி ரணி செயலாளர் மகேஸ்வரி திருவாருர் நகரத் தலைவர் மனோகரன் நகர செயலாளர் இராமலிங்கம், சாமிநாதன், இராஜேந்திரன், மஞ்சக்குடி சிவானந்தம், அம்பேத்கர் மண் டோதரி பாண்டியன் மகன் கள் இந்திரஜித் செல்வேந் திரன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும் பொதுமக் களும் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.