நேற்று மறைந்த சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி வி.தனபாலன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று காலை 7.15 மணிக்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன் அவருடன் திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கூடுதல் பதிவாளர் தேவதாஸ் மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். நீதிபதி குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் ஆறுதல் கூறினார்.