எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 3- திரைப்பட இயக் குநர் முக்தா சீனிவாசன் (வயது 88), 29.5.2018 அன்று சென்னையில் கால மானார். அவ்வமயம் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியூரில் பயணத்தில் இருந் தார். இன்று (3.6.2018) தியாகராய நகரிலுள்ள முக்தா சீனிவாசனின் இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று அவரது குடும்பத் தாரிடம் துக்கம் விசாரித்தார்.

முக்தா சீனிவாசனின் குடும்பத்தாரிடம் தமிழர் தலைவர் உரையாடிக் கொண்டு இருந்த போது, ‘சூரிய காந்தி’ திரைப்பட வெற்றி விழாவிற்கு மிகுந்த காய்ச்சலாக இருந்த நிலையிலும் தந்தை பெரியார் கலந்து கொண்டு ‘பெண்ணுரிமை’ பற்றி திரைப்படம் கூறும் கருத்தினைப் பாராட்டி பேசியதை நினைவுகூர்ந்தார். அந்த திரைப்படத் தயாரிப்பாளர் வேணு மற்றும் இயக்குநர் முக்தா சீனிவாசனின் வேண்டு கோளுக்கிணங்க நிகழ்ச்சியில் தந்தை பெரியார் கலந்து கொண்டார்.

மறைந்த ஜெயலலிதா அவர்கள் தந்தை பெரியாரிடம் பரிசு வாங்கிய நிகழ்வு ஜெய லலிதா அவர்களுக்கு ஒரு மறக்க முடியாத முக்கிய நிகழ்வாக அமைந்து விட்டது. தனிப்பட்ட முறையில் பழகுவதற்கும் நல்ல மனிதராக விளங்கிய முக்தா சீனிவாசனின் மறைவு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல பழகிய அனைவருக்கும் ஒரு பெரிய இழப்பு என்று தமிழர் தலைவர் கூறினார்.

முக்தா சீனிவாசனின் இல்லத்தில் அவரது துணைவியார் பிரேமா அம்மை யார், மகன் முக்தா சுந்தர் - வழக்குரைஞர் சுதர்சனா (மருமகள்), மகள் மாயா   மற்றும் உறவினர்கள் இருந்தனர். தமிழர் தலை வருடன் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் சென்றிருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner