எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், மார்ச் 13 பாகிஸ்தான் எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் 7 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட இந்தியரை, விடுவித்த பாகிஸ்தான் அவரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தது.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் குலாம் காதிர். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை தவறுதலாக கடந்து சென்றபோது, அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டார்.

உள்ளூர் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட அவர், சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக வழக்குத் தொடரப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில், அவரை விடுதலை செய்த பாகிஸ்தான் அரசு, இந்திய- பாகிஸ்தான் எல்லையிலுள்ள வாகாவில் எல்லை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப் பட்டார்.

கடந்த மாதம், இந்தியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தவறுதலாக பாகிஸ்தான் எல்லையை கடந்து சென்றபோது, பாகிஸ்தான் அரசு அந்த சிறுவனை நல்லெண்ண அடிப்படையில் உடனடியாக விடுவித்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெக்சிட் ஒப்பந்தத்தை காப்பாற்ற

பிரிட்டன் பிரதமர் போராட்டம்

பிரிட்டன், மார்ச் 13  அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது (பிரெக்சிட்) தொடர்பான ஒப்பந்தத்தை காப்பாற்ற பிரிட்டன் பிரதமர் தெரசா மே போராடி வருகிறார்.

பிரெக்சிட் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் இறுதிகட்டமாக எம்பிகளின் ஆதரவைப் பெற மே இறுதிகட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.  பிரெக்சிட் ஒப்பந்தத்தின் மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு   நடைபெறும் முன்பாக மே, எம்பிக்கள் இடத்தில் உறுதியளித்தி ருந்தார். ஆனால், இதனை பிரெக்சிட் ஆதர வாளர்கள் ஏற்காமல் வாக்கெடுப்பை தள்ளிப்போடும்படி பிரதமரை வலியுறுத்தி யிருந்தனர். அப்படி செய்யாதபட்சத்தில் பிரெக்சிட் மசோதா மீண்டும் ஒரு படுதோல்வியை சந்திக்கும் என அவர்கள் எச்சரித்திருந்தனர்.

அயர்லாந்து எல்லை சீரமைப்பை வலியுறுத்தி பிரெக்சிட் மசோதாவை ஜனவரி மாதத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்பிக்கள் நிராகரித்தனர். இந்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள வாக்ககெடுப்பில் பிரெக்சிட் ஒப்பந் தத்தை நிறைவேற்ற மே கடைசி கட்ட போராட்டத்தில் ஈடு பட்டுள்ளார்.

பிரெக்சிட் குறித்த பேச்சுவார்த்தை இப்போது பிரிட்டனின் கைகளில்தான் உள்ளது என பிரெக்சிட் பேச்சுவார்த்தைக்கான அய்ரோப்பிய யூனியனின் தலைவர் மைக்கேல் பார்னியர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner