எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், பிப். 22- காஷ்மீரில் புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்களைக் குறிவைத்து நடத் தப்பட்ட தாக்குதலுக்கு நியூசி லாந்து கண்டனம்  தெரிவித்து உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளிடையே இந்தத் தாக்குதல் பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது.

மேலும் இந்தத் தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ் தான் இடையே நிலவிய விரி சல் மேலும் அதிகமாகி மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள் ளது.

இந்தத் தாக்குதலுக்கு அமெ ரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது நியூசிலாந்து புல்வாமா தாக்கு தலுக்கு கண்டனத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை  நியூ சிலாந்து துணை பிரதமர் வின் சென்ட் பீட்டர்ஸ் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார்.

அதில், இந்த நாடாளுமன் றம் பிப்ரவரி 14ஆ-ம் தேதி  இந் திய மத்தியப் பிரிவு காவல் படையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிக்கிறது. எங்களது ஆழ்ந்த வருத்தங்களை இந்தியாவுக் கும், இந்திய மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் இந்தியா வுக்குத் துணை நிற்போம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner