எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்கா, பிப். 22- வங்கதேச தலைநகர் டாக்காவில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனவர்களின் எண்ணிக்கை 81ஆக வியாழக்கிழமை அதிகரித்தது. டாக்காவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் செயல்பட்டு வந்த அமில கிடங்கில் புதன்கிழமை இரவு 10:40 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. எரிவாயு உருளை வெடித்து இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தீயணைப்புப் படைத் தலைவர் தெரிவித்தார். சுமார் 37 தீயணைப்பு வாகனங்கள், 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடத்துக்கு அருகில் மணவிழா நடைபெறுவதால், அங்கிருந்தவர்களுக்கும் தீ விபத்தில் சிக்கினர்.

2 கார்கள், 10 சைக்கிள் ரிக்சாக்கள் உள்ளிட்டவையும் தீயில் எரிந்து நாசமாயின. மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெறுவதாக தாகா துணை ஆணையர் இப்ராகிம் கான் தெரிவித்தார். முன்னதாக, வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 2010-ஆம் ண்டில் இதேபோன்று அமில கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அதிகபட்சமாக 120 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூடு: இந்தியர் பலி

புளோரிடா, பிப். 22- அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து உள்ளூர் ஊடகங்கள் தரப்பில், ''அமெரிக்காவின் புளோ ரிடா மாகாணத்திலுள்ள பல்பொருள் அங்காடி யில் நுழைந்த இரு நபர்கள் திருடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணிபுரிந்த கோவர் தன் ரெட்டி (50)  என்ப வரை அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கோவர் தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்'' என்று செய்தி வெளியானது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்றும் அவர்கள் அந்தப் பல்பொருள் அங்காடியிலிருந்து எந்தப் பணத்தையும் எடுத்துச் செல்ல வில்லை என்றும் தகவல் வெளியானது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்ற னர். கொல்லப்பட்ட கோவர்தன் தெலங்கானா மாநிலத்தின் யாததிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 7 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அமெரிக்காவுக்குப் பணிக்காகச் சென்றார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

கொல்லப்பட்ட கோவர்தன் உடலை இந்தியா கொண்டு வர தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அங்குள்ள தெலுங்கு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner