எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், பிப். 7- அமெரிக்காவில் மக்கள் தொகையில் மூன் றில் 2 மடங்கு மக்கள் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அங்கு சுமார் 2 கோடி பேர் உடல் எடை அதிகரிப்பால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

எனவே அங்கு இதுகுறித்த கணக்கெடுப்பும் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

1995 முதல் 2015-ஆம் ஆண்டு வரை 50 வயதுக்குட்பட்ட உடல் பருமனான ஆண் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக் குட்படுத்தப்பட்டனர். அதில் உடல் பருமன் உள்ளவர்கள் புற்றுநோய் தாக்கத்துக்கு ஆளாகி இருப்பது கண்டு பிடிக் கப்பட்டது.

கணையம், சிறுநீரகம், கர்ப்பபை மற்றும் பித்த நீர்ப்பை யில் புற்றுநோய் தாக்கம் இருந்தது. இவை இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இளம் வயதினரை அதிகம் தாக்கியுள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகளில் உடல் பருமன் ஆனவர்கள் எண்ணிக்கை 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு புற்றுநோய் தாக்கம் அதிகம் இருப்பதால் உடல் பருமனை குறைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

ஜப்பானில் சப்போரோ பனித்திருவிழா

டோக்கியோ, பிப். 7- ஜப்பானின் வடக்கு பகுதியில் சப்போரோ பனித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர்கால திருவிழா ஆகும். பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் இவ்விழா வில் ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் செய்யப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பனித்திருவிழா நேற்று தொடங்கியது. 11-ஆம் தேதி வரை இத்திருவிழா நடைபெறுகிறது.

பனித்திருவிழாவையொட்டி, இந்த நகரத்தின் மூன்று பகுதிகளில் பனிச்சிற்பங்கள் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற கார்ட்டூன்கள், மலைகள், கட்டடங்களின் வடிவ மைப்பு, பனிக்குகைகள், விளையாடும் சிறுவர்கள், குதிரை பந்தயம் போன்ற அமைப்பில் இந்த பனிச்சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்களில் 5 சிற்பங்களின் உயரம் 33 அடிக்கு மேல் உள்ளது. இந்த பனிச்சிற்பங்கள் சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன. பனித்திருவிழாவில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களை காண ஏராளமான மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner