எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், பிப். 7- அமெரிக்கா வில் மாணவர் விசா நீட்டிப்பு பெற வேண்டும் என்பதற்காக போலியான பல்கலைக்கழகத் தில் சேர்ந்ததாக எழுந்த குற்றச் சாட்டின் பேரில் 129 இந்திய மாணவர்கள் உள்பட 130 பேர் ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், டில்லியில் உள்ள அமெரிக்க தூதருக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள் ளது. அதில், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள மாண வர்களின் நலன் மற்றும் மரி யாதை குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. அவர் களுடன் இந்திய அதிகாரிகள் உடனடியாக தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மாணவர் விசாவை நீட்டித்தபடி சட்ட விரோதமாக தங்கி பணிபுரிப வர்களை பொறி வைத்து பிடிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை சார்பில் ரகசிய நட வடிக்கை மேற்கொள்ளப்பட் டது. அதன்படி, மிச்சிகன் மாகா ணத்தில் ஃபார்மிங்டன் என்ற போலியான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அங்கு பணத்தை கட்டிவிட்டு கல்வி பயிலாமல், வெவ்வேறு இடங் களில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட் டன.

அதன்படி, வெளிநாட்டை சேர்ந்த பலர், ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தங்களுக்கான மாணவர் விசாவை நீட்டித்து அமெரிக்கா வில் தங்கியிருந்தனர். சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் விதமாக மாணவர்களை சேர்ப்பதற்கான தேர்வாளர்களும் செயல்பட்டு உள்ளனர். அதுபோன்ற தேர் வாளர்கள் 8 பேரை கடந்த வார தொடக்கத்தில் அமெரிக்க அதி காரிகள் கைது செய்தனர். அவர் கள் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ஆவர்.

இதைத்தொடர்ந்து போலி யாக விசா நீட்டிப்பு பெற்ற 129 இந்தியர்கள் உள்பட 130 மாண வர்களை, அமெரிக்க குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் பலர் தடுப்புக் காவல் மய்யங் களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்க ளைப் போன்றே மேலும் 650 மாணவர்கள் சிக்கலில் இருப்ப தாகத் தெரிகிறது. போலி விசா பெற்றதாக கைது செய்யப்பட்ட வர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெ ரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின் றனர்.

இந்நிலையில், கைது செய் யப்பட்ட 129 மாணவர்களில் 117 பேருடன் தொடர்புகொள்ள தூதரம் மூலம் அனுமதி பெறப் பட்டுள்ளது. மீதமுள்ளவர்க ளையும் விரைவில் தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இருநாட்டு தூதர கங்களின் மூலம் 24/7 தொடர்பு கொள்ளும் உதவி எண் அமைக் கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்து உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner