எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், பிப். 6- அமெரிக்கா வின் மத்திய மேற்கு மாகாணங் களில் வரலாறு காணாத அள வுக்கு கடும் குளிர் மற்றும் பனிப் பொழிவு நிலவுகிறது. குறிப் பாக இல்லினாய்ஸ் மாகாணத் தின் சிகாகோ நகரில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் குறைவாக வெப்ப நிலை பதிவாகி வருகிறது.

இதனால் மக்கள் வீடுகளுக் குள்ளேயே முடங்கி கிடக்கின் றனர். வீடுகள் இல்லாமல் பொதுஇடங்களில் வசித்து வரும் மக்களின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. கடும் குளிர் காற்றை தாங்கிக்கொண்டு பனித்துகள்களின் மீது படுத்து உறங்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக் கிறார்கள்.

இந்த நிலையில் சிகாகோ நகரில் வீடு இல்லாத நூற்றுக் கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கிய தோடு, அவர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறையும் எடுத்துக்கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார் ஒரு பெண். கேண்டிஸ் பெய்ன் என்கிற அந்த பெண் அங்குள்ள ஒரு ஓட் டலில் ஒரு அறைக்கு, ஒருநாள் 70 டாலர் வீதம் கட்டணமாக கொடுத்து 30 அறைகளை எடுத்து வீடு இல்லாதவர்களை தங்கவைத்துள்ளார்.

அவர் இந்த திட்டம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்ததும் அவருக்கு அனைத்து வகையிலும் உதவ தன்னார்வலர்கள் குவிந்தனர். அத்துடன் அவரது வங்கி கணக்கில் பணத்தையும் கொட்டி வருகிறார்கள்.

இலங்கையிலிருந்து 545 சிறைக் கைதிகள் விடுதலை

கொழும்பு, பிப். 6- பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் சிக்கியிருந்த இலங்கை கடந்த 4-.2.-1948 அன்று பிரிட்டிஷாரிடம் இருந்து அரசியல் ரீதியான விடுதலை பெற்றது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி மாதம் நான்காம் தேதியை அந்நாட்டினர்  இலங்கை தேசிய தினமாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், 71-ஆவது தேசிய தினத்தை இலங்கை மக்கள் கொண்டாடினர்.

தலைநகர் கொழும்புவில் முப்படையினர் அணிவகுப் புடன் நடைபெற்ற கொண்டாட்டத்தை மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில், தேசிய தினத்தையொட்டி சிறு வழக்கு களில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நன்ன டத்தை அடிப்படையில் விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, கொழும்பு, கண்டி, அனுராபுரம் ஆகிய சிறைகளில் இருந்து 545 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை சிறைத்துறை ஆணையாளர் உப்புல்டேனியா தெரி வித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner