எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜன.17  உலக வங்கி தலைவர் பதவிக்கு பெப்ஸி கோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) இந்திரா நூயி(63) பெயரை பரிந்துரைக்க அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

உலக வங்கி தலைவராக உள்ள ஜிம் யாங் கிம், வரும் பிப்ரவரி மாதம் தனது பதவியில் இருந்து விலக இருப்பதாக அண் மையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தலைவரைத் தேர்ந் தெடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்குமாறு, உலக வங்கியில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு அந்த வங்கியின் இயக்குநர்கள் குழு அறிக்கை வெளியிட்டது.

அதையடுத்து தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்வதற்கு யாரை தேர்ந்தெடுப்பது என்று அமெரிக்கா தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியில் கூறப் பட்டிருப்பதாவது:

உலக வங்கி தலைவர் பதவிக்கு முன்னிறுத்துபவர் களைத் தேர்ந்தெடுக்கும் குழு வில், நிதித்துறை செயலர் ஸ்டீ வன் நுச்சின், வெள்ளை மாளி கையின் தற்காலிக தலைவர் மிக் முல்வானே மற்றும் அதிபர் ட்ரம் பின் மூத்த மகளான இவாங்கா ட்ரம்ப் ஆகியோர் இடம்பெற்றுள் ளனர். தலைவர் பதவிக்கு முன் னிறுத்துபவர்களைத் தேர்ந்தெடுப் பதற்கான நேர்முகத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெப்ஸிகோ நிறுவனத்தின் முன் னாள் சிஇஓ இந்திரா நூயியை முன்னிறுத்த இவாங்கா ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார் என்று அதில் கூறப்பட்டிருந்தது. மிகப் பெரிய பொருளாதார நிர்வாகத் தின் தலைமைப் பொறுப்புக்கு பரிந்துரைப்பவர் களைத் தேர்ந்தெ டுக்கும் குழுவில் இவாங்கா இடம் பெற்றுள்ளது பொருளாதார நிபுணர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த நாளிதழில் கூறப் பட்டிருந்தது.

சென்னையைச் சேர்ந்தவரான இந்திரா நூயி, சென்னை கிறிஸ் தவ கல்லூரியில் படித்தவர்.

அமெரிக்காவில் பணியில் சேர்ந்த பிறகு அந்நாட்டு குடி யுரிமை பெற்று, அங்கேயே வசித்து வருகிறார்.

உலகின் இரண்டாவது பெரிய உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனமான பெப்ஸி கோ நிறுவனத்தில் 12 ஆண்டு களாக சிஇஓவாக பணியாற்றிய அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து வில கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner