எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காங்கோ, ஜன. 12- காங்கோ குடியரசில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் பெலிக்ஸ் சிசேகெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கோ குடியரசில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்றது.

அதில், எதிர்க்கட்சியான ஜனநாயக மற்றும் சமூக முன் னேற்றக் கட்சியின் தலைவர் பெலிக்ஸ் சிசேகெடி 70 லட்சத் துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் 35 சதவீத வாக்குகளைப் பெற்ற அவர், வெற்றி பெற்றதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டார்.

அதிபர் தேர்தலில் பெலிக்ஸ் சிசேகெடி முன்னிலை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படாத நிலையில், அவர் வெற் றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக மற்ற கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டுள்ள பெலிக்ஸ் ஷிசேகெடி, வரும் 18-ஆம் தேதி அதிபராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா - சீனா வர்த்தகப் பேச்சுவார்த்தை 3ஆவது நாளாக நீட்டிப்பு

பெய்ஜிங், ஜன. 12- வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்கா - சீனா இடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தை, மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டு புதன்கிழமையும் நடைபெற்றது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான அடுத்தக் கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தை, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடை பெற்றது. இதற்காக, அமெரிக்க வர்த்தக மேம்பாட்டுத் துறை துணைத் தலைவர் ஜெப்ரி கெர்ரிஷ் தலைமையிலான குழு பெய்ஜிங் வந்துள்ளது.

கடந்த ஆண்டு அர்ஜென்டீனாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது, அதிபர் சி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் செய்து கொண்ட உடன்ப டிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான பேச்சுவார்த் தையை அமெரிக்க - சீன குழுவினர் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தை புதன்கிழமைக்கும் நீடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பை விட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், இரு நாடு களுக்கும் இடையே நியாயமற்ற அளவில் வர்த்தகப் பற்றாக் குறை நிலவி வருவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்தச் சூழலில், தற்போது சீனாவில் அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையை அமெரிக்கக் குழு மேற்கொண்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner