எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தோகா, டிச. 5- பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்ட மைப்பிலிருந்து (ஒபெக்) விலக கத்தார் முடிவு செய்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஆதிக் கம் நிறைந்த அந்த கூட்டமைப் பில், சக உறுப்பு நாடுகளால் கத்தார் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த முடிவை அந்த நாடு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், எரிவாயு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தவிருப்பதால், ஒபெக்கிலிருந்து விலகுவதாக கத்தார் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் சாட் அல்-காபி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் ஜனவரி மாதம் முதல் ஒபெக் கூட்டமைப்பிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக அந்த அமைப் பிடம் தெரிவித்துவிட்டோம்.

ஒபெக் அமைப்பிலிருந்து விலகினாலும், எண்ணெய் உற் பத்தியில் தொடர்ந்து ஈடுபடு வோம். இருந்தாலும், எரிசக்தித் துறையில் இயற்கை எரிவாயு வுக்கே நல்ல எதிர்காலம் இருப் பதால், அதன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறோம்.

அதற்கு வசதியாகவே, ஒபெக் அமைப்பிலிருந்து விலகுகி றோம் என்றார் அவர். உலக அளவில், எரிவாயு ஏற்றுமதி யில் கத்தார் முதலிடம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரசியல் விவகா ரங்களில் சவூதி அரேபியாவுக் கும், கத்தாருக்கும் கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், சவூதி அரேபிய ஆதிக்கம் நிறைந்த ஒபெக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் கத்தாருக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து உள்ளன. இந்த சூழலில், அந்த அமைப்பிலிருந்து விலக கத்தார் முடிவு செய்துள்ளது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner