எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கெரிசோ, அக். 12- கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், பள்ளத்துக்குள் பேருந்து கவிழந்து ஏற்பட்ட விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நாட் டின் மேற்கே அமைந்துள்ள கெரிசோ நகரில் இந்த விபத்து உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்டது. தலைநகர் நைரோபியிலிருந்து, காகமெகா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கெரிசோ பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மிக ஆழமான சரிவில் அந்தப் பேருந்து உருண்டு விழுந்ததாக தகவல்கள் தெரிவிக் கின்றன.இந்த விபத்தில் காயத்துடன் உயிர்பிழைத்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

தேர்தல் தோல்வியை எதிர்த்து மாலத்தீவு முன்னாள் அதிபர் வழக்கு

மாலி, அக். 12- இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார்.

58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி வரும் நவம்பர் 17ஆ-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த  பதவியேற்பு விழாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வாக்குப்பதிவின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் நடந்த தில்லுமுல்லுவினால் முஹம்மது சோலி  58.4 சதவீதம் வாக்குகளை பெற்றதாக அறிவித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக யாமீன் தரப்பு வழக்குரை ஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner