எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப். 13- தமிழ்நாட் டின் மதுரை நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். அவர் அமெரிக்காவில் உள்ள வாசிங் டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.

இவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ சாதனமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து உள்ளார். (சோனார் என்பது நீரில் மூழ் கிய பொருட்களை ஒலி அலை களை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ஆகும்)

ராஜலட்சுமி நந்தகுமார் கண்டுபிடித்து உள்ள தொழில் நுட்பத்தினால், உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன் றவற்றை கண்டறிய முடியும், அதுவும் ஒருவரின் உடலை ‘சோனார்’ சாதனம் தொடாம லேயே கண்டுபிடிக்க முடியு மாம்.

இவரது கண்டுபிடிப்பு, உயிராபத்தான உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் புதிய கண்டுபிடிப்புகளை செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புக்காக ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ஆம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. இந்த விருது 5 ஆயி ரம் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம்) ரொக்கப்பரிசைக் கொண்டது.

இவர் சென்னையில் படித்து கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்.

தனது கண்டுபிடிப்புபற்றி ராஜலட்சுமி நந்தகுமார் கூறும் போது, “நான் எப்போதுமே சுவாசம், இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் ரீதியிலான சமிக் ஞைகளை கண்டறிவதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க விரும்பி னேன். ஏனென்றால் அவை தான், உடல் நலம் சார்ந்த கரு விகளுக்கு சாதாரணமாக பயன் படும் சமிக்ஞைகளாக உள்ளன” என்று குறிப்பிட்டார்.


பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் மனைவி மரணம்

லண்டன், செப். 13- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனைவி குல்ஸும் (68) உடல் நலக் குறைவு கா ரணமாக லண்டன் மருத்துவ மனையில் காலமானார்.

பனாமா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ் தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனைவி பேகம் குல்ஸும் நவாஸ், புற்றுநோ யால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக லண்டன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காததையடுத்து அவர் மருத்துவ மனையிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடலை லண்டனிலிருந்து பாகிஸ்தான் கொண்டு வருவ தற்கான அனைத்து ஏற்படுக ளும் செய்யப்பட்டுள்ளன. லாகூர் ஜதி உம்ராவில் உள்ள ஷெரீஃபுக்கு சொந்தமான இல்லத்தில் குல்ஸும் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குல்ஸும் இறுதி சடங்கு களை மேற்கொள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ், அவரது மகள் மரியம் மற்றும் அவரது மருமகன் முகமது சஃப்தார் ஆகியோர் ஒரு நாள் பரோலில் வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குல்ஸுமின் இறுதி சடங்கு களை மேற்கொள்ள ஷெரீஃபின் குடும்பத்தினர் மூன்று நாள்கள் பரோல் கேட்ட நிலையில், ஒரு நாளுக்கு மட்டுமே பாகிஸ் தான் அரசு அனுமதி அளித்துள் ளதாக தகவல் வெளியாகியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner