எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப். 13- பசிபிக் கடலில் ஏற்பட்ட புயல் சூறாவளி புயலாக மாறி அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது. அதையடுத்து ஏற் பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடி யிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் ஹரிகேன் புயலை முன்னிட்டு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வாசிங்டன் டி.சி. மேயர் மூரியல் இ பவுசர் கூறுகையில், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், பொதுப்பணி துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்வ தற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.  இன்னும் சில தினங்களில் எந்த நேரத்திலும் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் வீட்டை காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அம்மாகாண ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடரின் போது அனைத்து வகையிலும் பாதுகாப்பு மற்றும் பெடரல் எமர்ஜென்சி அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லிபிய கடல் பகுதியில்

படகு கவிழ்ந்து விபத்து: 100 பேர் பலி

கெய்ரோ, செப். 13- லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு 2 ரப்பர் படகுகள் அய்ரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றன. அந்தப் படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 100 அகதி கள் பரிதாபமாக பலி ஆகினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோ ரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த தகவலை எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner