எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிச்சுவான், ஜூலை 14  சீனாவில் இரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் பகுதியில் உணவு மற்றும் மருந்துவ தொழிற்துறைகளுக்கான இரசாயனங்களை தயாரிக்கும் தனியார் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மள மளவென ஆலையின் மற்ற பகுதிகளிலும் பரவியதால் எங்கும் புகைமூட்டம் காணப்பட்டது.

இதனிடையே ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்தவர்களில் ஒரு பெண் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசேதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவின் டியாஜின் மாகாணத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 165 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. சீன அரசு தொழில்துறை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக (குறிப்பாக நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இரசாயன ஆலைகள்) பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தீ விபத்தில் கட்டடத்தில் உள்ள கற்கள், கண்ணாடிகள் வெடித்து சிதறுவதால் அருகில் உள்ள கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்துள்ளது.

ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடந்த 5 மணிநேரத்திற்கும் மேலாக பேராடி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner