எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, ஜூலை 14 இலங் கையில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் மரண தண்ட னையை அமல்படுத்த அதிபர் சிறிசேனா ஒப்புதல் அளித் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் கடந்த 1976-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது.

அதன்பிறகு, மரண தண் டனை அளித்தாலும் நிறை வேற்றப்படவில்லை. தற்போது, ஆயிரம் தூக்குத் தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களில் 950 பேர் போதைப் பொருள் கடத்தல் குற்ற வாளிகள்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து 3 கொலைகள் நடந்துள்ளன. 160 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தண்டனை கைதிகளும் சிறையில் இருந்தபடியே, குற் றத்துக்கு காரணமாக இருந்து வந்த தெரியவந்துள்ளது.

இதையடுத்து போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப் படுத்துவது குறித்த ஆலேசனை கூட்டம் அதிபர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மரண தண்டனையை அமல் படுத்த முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக 19 கைதி களை தூக்கிலிடுவதற்கு தீர் மானம் நிறைவேற்றி, அதி பரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஒப்புதல் அளித்ததும் மரண தண்டனையை நிறை வேற்றும் நடவடிக்கைகள் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner