எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதத்திற்கு எதிராக மக்கள் தீர்ப்பு

அயர்லாந்து குடியரசில் அனைவருக் கும் மண உரிமை, மணவிலக்கு உரிமை மற்றும் கருத்தடை தடைச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக் கெடுப்பில் 66 விழுக்காட்டினர் வாக்களித் தனர். இதன்மூலமாக ரோமன் கத்தோலிக்க கிறித்தவ சர்ச் விதிமுறைகளுக்கு எதிராக அதிகப்படியான மக்கள் வாக்களித்து எட்டாவது சட்டத்திருத்தத்தை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

பிரெஞ்ச் தேசிய சுதந்திர சிந்தனை கூட்டமைப்பு அயர்லாந்து மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களின் முடிவை வரவேற்றுள்ளது.

மண உரிமை மற்றும் மண விலக்கு உரிமைக்கான சட்டத்தில் திருத்தம் மேற் கொள்ள அந்நாட்டில்  பொதுமக்கள் பங் கேற்கின்ற வாக்கெடுப்புக்காக கருக்கலைப் புத் தடை சட்டத்தை நீக்குவதற்கான திருத் தச்சட்டம் முன்வைக்கப்பட்டது. 25.5.2018 அன்று  பொதுமக்கள் வாக்கெடுப்பு முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, 66 விழுக் காட்டினரின் ஆதரவுடன்  அயர்லாந்து குடியரசின் அரசமைப்புச்சட்டத்தில் எட் டாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்புக்கு தடை இருந்து வந்தது. கருவில் உள்ள குழந்தைக்கு உள்ள பிறப்புரிமைபோல், தாய்க்கும் வாழ்வுரிமை உள்ளது. அந்த வகையில் தற்பொழுது கருக்கலைப்புத் தடைச் சட்டத்துக்கு எதிராக பெருமள விலான மக்கள் வாக்களித்துள்ளனர்.

1861ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு செய்தால் 14ஆண்டுகள் ஆயுள் தண்டனையாக சிறைத்தண்டனை அளிக்கப்படுகின்ற சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. அயர்லாந்து நாட்டின் அரசமைப்புச்சட்டத்தில் 8ஆவது திருத்தத்தின்படி, தற்பொழுது கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு தாய்மார்களுக்கு சட்டப்படியான உரிமை அளிக்கப்பட்டு நீள்ளது.

கரு உண்டான முதல் 12 வாரங்களில் கருக்கலைப்பு செய்வதுகுறித்து முடிவெடுக் கலாம். 24வாரங்களைத் தாண்டிய நிலையில் கருக்கலைப்பு செய்வது என்பது தாயின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். கருப்பையில் மிகவும் சிக்கலான நிலை ஏற்பட்டால்மட்டும் கருக்கலைப்பினை 24 வாரங்கள் கடந்தபின் செய்யலாம் என்று திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய சட்டத்திருத்தத்துக்கு காரணமான அயர்லாந்து வாழ் மக்களுக்கு பிரெஞ்ச் தேசிய சுதந்திர சிந்தனை கூட்டமைப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்நிலையை எட்டுவதற்காக அனைத்து ஜனநாயக அமைப்புகள், பெண் களின் உரிமைகளுக்கான அமைப்புகள், மதசார்பற்ற, மனித நேய, நாத்திக சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரும் பாடுபட்டன.

அயர்லாந்து மக்கள் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்திவிட்டார்கள். மீண்டும் ரோமன் கத்தோலிக்க சர்ச் தோற்கடிக்கப் பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டில் செப்டம்பரில் ரோமன் கத்தோலிக்க சர்ச் எடுத்த முடிவை தற்பொழுது நடைபெற்ற வாக்கெடுப்பு முறியடித்துள்ளது.

முறையற்ற உறவுகள் மற்றும் பாலியல் வன்முறையின்போது ஏற்படுகின்ற கரு வைக்கூட, கலைப்பதற்கு தடை விதிக்கப் பட்டது. அயர்லாந்து நாட்டின் உச்சநீதிமன்ற சட்டம் தடையை நீக்க மறுத்துவிட்டது. விருப்பமற்ற கருவைக் கலைப்பதற்கு சட்டப் படி தடுக்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்பொழுது 66.9 விழுக்காடு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள அரசமைப்புச்சட்ட 8ஆவது திருத்தத்தின்படி, அது நிறை வேறியுள்ளது.

அய்ரோப்பாவிலிருந்து தனி நாடாக உரு வான அயர்லாந்து குடியரசு 1995ஆம் ஆண்டு நவம்பரில் மண விலக்கை சட்ட பூர்வமாக ஆக்க விரும்பியது. ஆனால், 0.6 விழுக்காடு அளவில்தான் ஆதரவான வாக் குகளைப் பெற்றது. அயர்லாந்து அரசமைப் புச்சட்டத்தின் 15ஆவது திருத்த சட்டமாக பின்னாளில் வரலாம்.

2015ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பால், திருமண சான்றளிப்பதில் சர்ச்சுகளின் பங்களிப்பு வெகுவாக குறைக் கப்பட்டது.

2009ஆம் ஆண்டில், பள்ளிகள், கல்வி நிறுவனங்களை அழிக்கக்கூடிய வகையில், கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நிலைகுலையச் செய்கின்ற அறிக்கைகள் வெளியாயின. குழந்தைகள்மீதான பாலியல் வன்முறைகள், முறைகேடுகள் செய்து, கல்வி நிறுவனங் களுக்கு அளிக்க வேண்டிய நிதியுதவிகளை திட்டமிட்டு முடக்கிய நிலைகள் ஏற்பட்டன. இதுபோன்ற குற்றசெயல்கள்குறித்த தக வல்கள் பல ஆண்டுகளாகவே வெளி வராமல் இருந்தன. 2014ஆம் ஆண்டில் துவாம் பகுதியில் பிறந்த குழந்தைகளின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சூழல்கள் மாறத் தொடங்கின.

பிஷப்புகளில் மிகச்சிறந்தவராக அறியப் பட்ட டப்ளின் பிஷப் மெக்ர் டையர்முயித் மார்ட்டின் 2015ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிவிப்பில், இளம் தலைமையினரிடம் கருத்துகளைக் கேட்டு, பொதுமக்களிடையே வாக்கெடுப் பின்மூலமாக சமூகப் புரட்சி ஏற்படும் என்றார். அதன் தொடர்ச்சிதான் தற் பொழுது நடந்துள்ளது.

இதற்கு ஒரே வழி அய்க்கிய மற்றும் மதசார்பற்ற அயர்லாந்தாக இருப்பதுதான். அதாவது மத சர்ச்சுகள், அரசில் தலை யிடாமல் தனியே இருந்திட வேண்டும்.

25.5.2015 அன்று பன்னாட்டளவில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அனைவருக்கும் உள்ள மண உரிமை குறித்து பொதுவாக்கெடுப்பின்போது வெற்றிகரமாக ஆதரவாக 62 விழுக் காட்டுக்கும் மேலாக வாக்குகள் பெற்றது. முதற்கட்டமாக அம்முடிவில் உறுதியாக தீர்மானிக்கப்பட்டபிறகு, அயர்லாந்து குடியரசில் முதன்மையான சமத்துவத்தை எட்டும் முடிவை எடுக்க முடியும். கருத்தடை செய்வது சட்டவிரோதமாக இன்னமும் உள்ளது. கருவிலுள்ள குழந் தைக்கும், தாய்க்கும் சம அளவில் உரிமை உள்ளதாக சட்டம் கூறுகிறது. 1983ஆம் ஆண்டில் அரசமைப்புச்சட்டத்தின் எட் டாவது திருத்தத்தின்மீது மக்கள் தொகை யில் 67 விழுக்காட்டினர் மட்டுமே பொது மக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்தார்கள். ஆகவே, அயர்லாந்து மக்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பு மீண்டும் அளிக்கப்படவேண்டும் என்று அப்போது செய்திக்குறிப்பில் கூறப் பட்டது.

தற்பொழுது அயர்லாந்து மக்கள் எவ்வித குழப்பமுமில்லாமல் மிகத் தெளி வுடன்  வாக்களித்துள்ளார்கள். பன்னாட் டளவிலான குடும்பங்களுடனான சந்திப்புக் கூட்டத்தில்  வரும் ஆகஸ்ட் 25 மற்றும் 26 அன்று அயர்லாந்து நாட்டிற்கு செல்ல உள்ள போப்பை பிரதமர் தாவோய்சீச் லியோ வரத்கார் வரவேற் கிறார். தற்போது பெற்றுள்ள வெற்றியின் முக்கியத்துவம் அப்போது தெரியவரும்.

டப்ளினில் 9.11.2005 அன்று  அயர் லாந்து குடியரசின் நாடாளுமன்றத்துக்கு (டெயில் அய்ர்ஆன்) முன்பாக லிசோ டொன்னெல் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “அரசு, ரோமன் கத்தோலிக்க சர்ச் அடிப்படையில் ஒன்றுடன் மற்றொன்று மரியாதை செலுத்தவேண்டும். அரசுமீது ரோமன் கத்தோலிக்க சர்ச் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்துவதன் விளைவு முற்றி லுமாக நிறுத்திக்கொள்ள வேண்டியதாகி விடும்’’ என்றார்.

தொழிலாளர் கட்சி செனட்டர் இவானா பாசிக் 18.7.2010 அன்று குறிப்பிட்டதாவது:

“சமூகத்தின் பன்முகத்தன்மையை பிர திபலிக்கக்கூடிய மதசார்பற்ற அரசமைப்பு அமைவதற்காக பரப்புரைக்கான காலகட்டம் வந்துவிட்டது’’ என்றார். பன்னாட்டு சுதந்திர சிந்தனை சங்கத்துடன் இணைந்து அனைத்து மதசார்பற்ற, மனிதநேய, நாத்திக சங்கங்கள் அதையே விரும்புகின்றன.

அரசு கிறித்துவ ரோமன் கத்தோலிக்க சர்ச்சுடன் கண்டிப்பாக எவ்வித தொடர்பு மின்றி சுதந்திரமாக இயங்க வேண்டும் அதுஒன்றுதான் சுதந்திரமான அய்க்கிய அயர்லாந்து நாடாக இருப்பதற்கு வழிவகுக் கும் என்று பிரெஞ்ச் தேசிய சுதந்திர சிந் தனை கூட்டமைப்பு கருதுகிறது.

internationalfreethought.org இணையத்திலிருந்து

- ந.க.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner