எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெனிவா,  மார்ச் 19 உலகம் முழுவதும் வாகனப் பெருக் கத்தால் பெருகிவரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக னங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக் களை கட்டுப்படுத்தும் விதத்தி லும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் கண்காட்சி சமீபத்தில் நடை பெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற பாப் அப் சிஸ்டம்  என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிறிய ரக காராக தோற்ற மளிக்கும் இந்த பாப் அப் சிஸ்டம் சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியதாக இருக்கும் என தெரியவந்துள்ளது. கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்ட அதிநவீன தொழில்நுட்பத் துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது. சாலையில் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேக மாக கடந்து செல்ல வேண்டும் என்று கருதும் நேரத்திலும், டுரோன்

எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.
வானத்தின் வழியாக பறந்து செல்லவும் சுலபமான போக்கு வரத்து குறைவான பாதை எது? என்பதை இந்த காரில் உள்ள கம்ப்யூட்டரே தீர்மானித்து கொள்ளும். நம்மூர் ராட்டினங் களில் அமர்ந்திருக்கும் குழந்தை யைபோல் நாம் இருக்கையில் நிம்மதியாக உட்கார்ந்தவாறு இயற்கை காட்சிகளை ரசித்தபடி இந்த காரில் பறந்து செல்லலாம்.

இதற்காக, வானத்தில் வட்ட மடித்தபடி வரும் ஆளில்லா விமானம் சாலையில் நிற்கும்  பாப் அப் சிஸ்டம் காரின் மேலே உட்கார்ந்து கொள்ளும். இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் சாலையில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ந்து செல்ல முடியும் என்பது மேலும் ஒரு சிறப்பம்ச மாகும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner