எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், மார்ச் 14- அய்ரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.

அய்ரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு செய்த இங்கிலாந்து அரசு, இது தொடர்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தியது.

அந்த நாட்டு மக்களில் பெரும்பான் மையானோர் இதற்கு ஆதரவாக வாக்க ளித்ததால் அய்ரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என முடிவா னது.

அதனை தொடர்ந்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக பதவி ஏற்ற தெரசா மே முறைப்படி அய்ரோப்பிய கூட்ட மைப்பில் இருந்து இங்கிலாந்து வெளி யேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்.

ஆனால் அது அவருக்கு அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. ஏனெ னில் அய்ரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்ட போதிலும், எந்த மாதிரியான முன் னேற்பாடுகளுடன் இது நிகழவேண்டும் என்பதில்தான் சிக்கல் உள்ளது.

‘பிரெக்சிட்’ நடவடிக்கைக்காக தெரசா மே அய்ரோப்பிய கூட்டமைப் பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கான ஒப்புதலையும் பெற்றார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி இந்த ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப் பட்டது. அப்போது இந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

அதன் பின்னர் எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் அய்ரோப்பிய கூட்டமைப் பில் இருந்து வெளியேறலாம் என்கிற தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்தார்.

ஆனால் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதையும் நிராகரித்தனர். அத்துடன் ‘பிரெக்சிட்’ நடவடிக்கைக் காக புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் தெரசா மேவை வலியுறுத்தினர்.

தெரசா மே அதனை ஏற்றுக்கொண் டார். ஆனால் அய்ரோப்பிய கூட்ட மைப்போ ‘பிரெக்சிட்’ நடவடிக்கைக்கு தற்போது உள்ள ஒப்பந்தமே இறுதி யானது என்றும், பேசுவதற்கு இடம் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறி விட்டது.

இந்த நிலையில் தெரசா மே அய் ரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்சிட்’ ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறு தல்களை கொண்டு வந்தார்.

இதையடுத்து மாற்றங்களுடன் கூடிய அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

அப்போது இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 242 ஓட்டுகள் கிடைத்தன. எனினும் ஒப்பந்தத்தை எதிர்த்து 391 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டனர். இதனால் 149 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையா ளர்களை சந்தித்த தெரசா மே, சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் அய்ரோப்பிய கூட் டமைப்பில் இங்கிலாந்து வெளியேறும் என தான் இன்னும் நம்புவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில், ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்சிட்’ மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்கும். அதையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 50இ-ன் கீழ், அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதை தாமதப் படுத்தலாமா என்பது தொடர்பாக ஓட் டெடுப்பு நடத்தப்படும்” என கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner