எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், பிப். 22- அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையேயான 2-ஆவது சந்திப்பு வியட்நாமின் கனோய் நகரில் வருகிற 27, 28ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுமூச்சில் நடந்து வருகின் றன. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகை யாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், அணுஆயுதங்களை முழுமையாக கைவிட வட கொரியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்கவில்லை என கூறினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

வியட்நாமில் நடைபெற உள்ள கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இது தொடர்பாக தென்கொரிய அதி பர் மூன் ஜே இன்னை தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினேன். வியட்நாம் சந் திப்பு குறித்து தீர்க்கமாக ஆலோசித்தோம். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் வெளிவரும் என நம்புகிறேன். அணுஆயுதங் களை முழுமையாக கைவிடு வதற்கு காலக்கெடு நிர்ணயித்து வடகொரியாவுக்கு நாங்கள் நெருக்கடி தரவில்லை. ஆனால் அது விரைவில் நடக்க வேண் டும் என பலரும் விரும்புகி றார்கள். அது நிச்சயம் நடக்கும் என்பதில் எங்களுக்கு நம் பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner