எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரான்சிஸ்கோ, பிப். 21- மெக்சிகோ எல்லைச் சுவர் எழுப்ப நிதி பெறுவ தற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்துள்ள அவசர நிலை பிர கடனத்தை எதிர்த்து 16 மாகாண அரசு கள் வழக்கு தொடுத்துள்ளன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்ப தாவது:

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் அவ சர நிலை அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து  16 மாகாண அரசுகள் வழக்கு தொடுத்துள்ளன.

கலிஃபோர்னியா, கோலராடோ, கனெக்டிகட், டெலவேர், ஹவாய், இல்லினாய்ஸ், மெய்னே, மேரிலாண்ட், மிச்சிகன், மின்னசோட்டா, நவாடா, நியூ ஜெர்சி, நியூ மெக்சிகோ, நியூயார்க், ஆரகன், வர்ஜீனியா ஆகிய அந்த மாகா ணங்களின் அரசுகள் ஒன்றிணைந்து சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அளித் துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:

அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித் துள்ள தேசிய அவசர நிலை அரசியல் சாசனத்துக்கு முரணானதும், சட்டவிரோ தமானதும் ஆகும்.

திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய் யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு. எனவே, மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவ தற்காக நாடாளுமன்ற அனுமதி இல் லாமல் அதிபர் டிரம்ப்பால் நிதி ஒதுக் கீடு செய்ய முடியாது.

அவசர நிலை அறிவித்துள்ளதன் மூலம் ஒரு புதிய அரசியல் சாசனக் குழப்பத்தை டிரம்ப் உருவாக்கி வரு கிறார்.

அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக் கும் இடையே தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என்று டிரம்ப் நீண்ட கால மாகவே கூறி வருகிறார்.

அந்த நோக்கத்தை நிறைவேற்றுவ தற்காகவே தற்போது அவர் அவசர நிலையை அறிவித்துள்ளார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெக்சிகோ வழியாக அமெரிக்கா வுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்கும் வகையில், எல்லை நெடுகிலும் தடுப் புச் சுவர் எழுப்புவதற்காக நிதிநிலை அறிக்கையில் 570 கோடி டாலர் (சுமார் ரூ.40,300 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலி யுறுத்தி வருகிறார். அதற்கு எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக நிதிநிலை அறிக்கை மசோதா நிறைவேற்றப்படாததால், பல் வேறு முக்கிய அரசுத் துறைகளும் கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டன.

அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக நாள்களுக்கு நீடித்த இந்த அரசுத் துறைகள் முடக்கத்தின் விளைவாக, 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட் டிருந்தனர்.

இந்த நிலையில், மெக்சிகோ எல் லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு இல்லாம லேயே, வரும் கடந்த வெள்ளிக்கிழமை வரை அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக் கீடு அளிக்கும் மசோதாவை ஏற்க அதி பர் டிரம்ப் சம்மதித்தார்.

அதனைத் தொடர்ந்து, முடக்கப்பட் டிருந்த அரசுத் துறைகள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கின.

எனினும், எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக் கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.

அந்தச் சூழலில், எல்லைச் சுவருக்கு அதிபர் டிரம்ப் கேட்ட 570 கோடி டால ருக்கு பதில், 137.5 கோடி டாலர் (சுமார் ரூ.9,700 கோடி) மட்டும் ஒதுக்கீடு செய்து புதிய நிதிநிலை அறிக்கை மசோதாக்களை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடந்த வாரம் நிறை வேற்றினர்.

இந்தச் சூழலில், எல்லையில் தடுப் புச் சுவர் எழுப்பவதற்கு நாடாளுமன்ற அனுமதியில்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகுக்கும் வகையில், நாட்டில் அவசர நிலையை அமல்படுத் தப் போவதாக டிரம்ப் கடந்த வெள்ளிக் கிழமை அறிவித்தார்.

அந்த அறிவிப்பை எதிர்த்தே தற் போது 16 மாகாண அரசுகள் வழக்கு தொடுத்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner