எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டுனிஸ், பிப். 7- துனிசியா நாட் டில் இசுலாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக் கும் நோக்கத்தில் சில குழுவி னர் ஆயுதமேந்திய பயங்கர வாதிகளாக செயல்பட்டு வரு கின்றனர்.

வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் காவல்துறையினர், அரசு அதி காரிகளை குறிவைத்து இவர் கள் பயங்கரவாத தாக்குதல் களை நடத்துகின்றனர்.

கடந்த 2015-ஆண்டு மார்ச் மாதத்தில் தலைநகர் டுனிஸ் நகரில் உள்ள அருங்காட்சிய கத்தில் இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத் துக்கு 3 மாதங்களுக்கு பின்னர் சோசீ என்னும் இடத்தில் உள்ள கடற்கரை சொகுசு விடுதிமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 வெளிநாட்டினர் உள்பட 38 பேர் பலியாகினர்.

அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் அதிபரின் பாதுகாப்பு படையினர் மீது பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல்களையடுத்து அந்நாட்டில் முதன்முறையாக 2015ஆ-ம் ஆண்டில்  ‘எமர் ஜென்சி’ எனப்படும் அவசர நிலை சட்டம் பிரகடனம் செய் யப்பட்டது. அதைதொடர்ந்து, உள்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் வேளை களில் அடுத்தடுத்து அவசர நிலை சட்டம் பிரகடனம் செய் யப்படுகிறது.

அவ்வகையில், கடந்த 6.1.2019 அன்று ஒருமாத காலத் துக்கு அவசரநிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் அவசரநிலை சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீட்டித்து துனிசியா அதிபர் பேஜி சைட் எஸ்ஸெப்ஸி இன்று உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner