எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பீஜிங், ஜன. 14- சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் 87 தொழிலா ளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடி யாமல் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர். 66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்திற்கான கார ணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

சீனாவில் செயல்படும் நிலக்கரி சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: துளசி கபார்ட் அறிவிப்பு

வாசிங்டன், ஜன. 14- அமெரிக்காவில் வரும் 2020-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவ தாக ஹவாய் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் துளசி கபார்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முதல் இந்து நாடாளுமன்ற உறுப்பினரான இவர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பை இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியிடு வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக ஒரு இந்து வேட்பாளர் போட்டியிட்டால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து இந்திய வம்சாவளியினரின் கருத்துகளை துளசி கபார்ட் கேட்டறிந்து வந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சூழலில், தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் கடந்த மாதம் முதல் முறையாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை துளசி கபார்ட் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துளசி கபார்ட், ஹவாய் மாகாணத்தின் 2-ஆவது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். சமோவா தீவுகளைப் பூர்வீக மாகக் கொண்ட இவர்தான், அமெரிக்காவின் முதல் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அந்தப் பதவிக்குப் போட்டி யிடும் முதல் இந்து என்ற பெருமையையும் அவர் பெறுவார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner