எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரகஸ், ஜன. 12- சர்வதேச நாடுகளின் விமர்சனத்தையும் மீறி வெனிசுலா அதிபராக, நிக்கோலஸ் மடூரோ வியாழக் கிழமை இரண்டாவது முறை யாக பொறுப்பேற்றுக் கொண் டார்.

தலைநகர் கராகஸ் நகரில் உள்ள உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதி மைக்கேல் மொரீனோ அவ ருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் கியூபா, பொலிவியா நாடுகளின் அதி பர்கள் உள்பட 94 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.

எனினும், கனடா மற்றும் சில தென் அமெரிக்க நாடுகள், அவர் இரண்டாவது முறை அதிபராக பதவியேற்பதை அங்கீகரிக்கவில்லை.

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடந்த மே மாதம் அதிபர் தேர் தலில் முறைகேடு நடைபெறு வதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

நடந்து முடிந்த அந்த தேர்த லில் நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலை தாங்கள் புறக்கணித்ததன் கார ணமாக, மடூரோ பெற்றுள்ள வெற்றி சட்ட விரோதமானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடந்த சில ஆண்டுகளாக, அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படுகி றது. இதனால், கச்சா எண் ணெய் உற்பத்தி வீழ்ச்சியடைந் தது. இதனால், வரலாறு காணாத அளவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. இதற்கு மடூரோவின் சர்வாதிகாரப் போக்கே காரணம் என்று எதிர்க் கட்சிகளும், உலக நாடுகளும் விமர்சித்து வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner