எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியோல், ஜன. 12- வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொரு ளாதாரத் தடைகள் விலக்கப்பட வேண்டும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக் கிழமை கூறியதாவது:

அணு ஆயுதங்களைக் கைவி டுவதற்கான நடவடிக்கைகளை வட கொரியா இன்னும் உறுதி யாக மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான், அந்த நாட் டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக் கிக் கொள்ளும்.

வட கொரியா மீது விதிக்கப் பட்டுள்ள பொருளாதாரத் தடை கள் விலக்கிக் கொள்ளப்பட் டால்தான், அந்த நாட்டுடன் தென் கொரியா வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

எனவே, அந்தப் பொருளா தாரத் தடைகளை விலக்குவது குறித்து அமெரிக்காவிடம் பேசு வோம் என்றார் அவர்.

தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவு கணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதி வரை தொடர்ந்து நடத்தி வந்தது.

இதனால், வட கொரியா வுக்கும், அமெரிக்க -தென்கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.

இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற் றுச் சிறப்பு மிக்க சந்திப்புகள் இரண்டு முறை நடைபெற்றன.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பையும் கிம் ஜோங்-உன் சிங்கப் பூரில் கடந்த ஜூன் மாதம் சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, கொரிய தீபகற் பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலை வர்களும் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில், அந்தத் தீர் மானத்தை நிறைவேற்றுவதற் காக வட கொரியா போதிய அளவு செயல்படவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் போக்கைக் கடைப் பிடிப்பதாக வட கொரியாவும் ஒன்றையென்று குற்றம் சாட்டி வருகின்றன. இதன் காரண மாக, வட கொரியா மீதான அமெரிக்க பொருளாதாரத் தடை கள் தொடர்ந்து அமல்படுத்தப் பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner