எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, ஜன.11 இலங்கை வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தமிழரான சுரேன் ராகவனை அதிபர் மைத்ரிபாலா நியமித்ததற்கு, அந்த மாகாண முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். அந்தப் பதவிக்கு தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அதற்காக, அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களின் உணர்வு களையும், துன்பங்களையும் ஒரு தமிழரால்தான் முழுவதும் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், அவர்களது பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஆளுநர் சுரேன் ராகவன் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சி.வி. விக்னேஸ்வரன்.

வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில்

ஒரு பாலமாக செயல்பட போகிறேன்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர்

கொழும்பு, ஜன.11 இலங்கையில், வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட போவதாக வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஆளுநராக நேற்றுமுன்தினம் (9.1.2019) பதவியேற்ற பிறகு பேசிய அவர், வீழ்ந்திருக்கும் தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றிருப்பதாக கூறினார்.

வட மாகாணத்தில் தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்படு வதில்லை என கூறிய ஆளுநர் சுரேன் ராகவன், வரும் ஏப்ரல் மாதத்திற்குள், பெயர் பலகைகளில் இரண்டு மொழிகள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner