எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மன்பிஜ், ஜன. 10- சிரியாவில் அமெரிக்க ஆதரவு குர்துப் படையினரின் கட்டுப் பாட்டில் இருந்த மன்பிஜ் நகரில், ரசிய ராணுவ காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவிலிருந்து அமெரிக்க வீரர்கள் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அதிபர் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பார் வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ரசிய ராணுவ காவல் துறையினரின் செய்தித் தொடர்பாளர் யூசுப் மமடோவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

சிரியாவின் மன்பிஜ் நகரில் ரசிய ராணுவ காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு நிலைகொண்டுள்ள அல்-அசாத் தலைமையிலான ராணுவத்துக்கு ஆதரவாக ரசியப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு படைகளின் இயக்கத்தைக் கண்காணிப்பதும், அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதும் ரசிய ராணுவ காவல்துறையினருக்கு அளிக் கப்பட்டுள்ள பணிகளாகும்.

அந்தப் பகுதியில், ரசிய ராணுவ காவல்துறையினர் தொடர்ச்சியாக பாது காப்புப் பணிகளை மேற்கொள்வர் என் றார் அவர்.

கடந்த 2014-ஆம் ஆண்டில், அதுவரை அதிகம் அறியப்படாத அய்.எஸ். பயங் கரவாதிகள் சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினர்.

அவர்களது அதிவேக முன்னேற்றத் தாலும், கொடூரமான போர் முறையா லும் நிலைகுலைந்த சிரியா ராணுவமும், கிளர்ச்சியாளர்களும் பின்வாங்கினர். இதையடுத்து அய்.எஸ். பயங்கரவாதி களின் ராணுவ பலம் அதிகரித்தது.

இந்த நிலையில் அமெரிக்கக் கூட் டுப் படைகளின் உதவியுடன் சிரியாவி லுள்ள குர்து மற்றும் கிளர்ச்சிப் படையினரும், ரசியாவின் உதவியுடன் சிரியா ராணுவமும் மேற்கொண்டு வந்த தீவிர நடவடிக்கைகளால் அய்.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த 95 சதவீத பகுதிகள் மீட்கப்பட்டன.

அய்.எஸ்.ஸுக்கு எதிராக சண்டை யிட்டு வரும் குர்துகள் மற்றும் கிளர்ச் சிப் படையினருக்கு ஆதரவாக அங்கு 2,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சிரியாவில் அய். எஸ்.ஸை ஒழிக்கும் நோக்கம் நிறைவே றிவிட்டதால், அங்கிருக்கும் வீரர்கள் அனைவரையும் திரும்ப அழைக்கப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த டிசம்பர் மாதம் அதிரடியாக அறிவித்தார்.

அதையடுத்து, அமெரிக்க வீரர்க ளுடன் இணைந்து அய்.எஸ்.ஸுக்கு எதிராகப் போரிட்டு வந்த சிரியா குர் துப் படையினரின் கதி குறித்து அச்சம் எழுந்துள்ளது. அண்டை நாடான துருக்கியில், பயங்கரவாதத் தாக்குதல் களை நிகழ்த்தியுள்ள அந்த நாட்டு குர்து அமைப்பினருக்கு, சிரியா குர்துகள் ஆதரவு அளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.

அதன் காரணமாக, சிரியாவிலுள்ள குர்துப் படையினர் மீது துருக்கி ராணு வம் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்க வெளி யேற்றத்துக்குப் பிறகு சிரியாவில் துருக்கி ராணுவத்தால் சிரியா படையினர் வேட்டையாடப்படுவார்கள் என வும், இதனால் அய்.எஸ். பயங்கரவாதி களின் கை மீண்டும் மேலோங்கும் என வும் அஞ்சப்படுகிறது.

அதையடுத்து, துருக்கியிடமிருந்து தங்கள் பகுதிகளைப் பாதுகாத்துக் கொள்ள அல்-அஸாத் தலைமையிலான ராணுவத்துடன் குர்துப் படையினர் புதிய கூட்டணி அமைத்தனர். அதை யடுத்து, சிரியாவில் துருக்கியையொட் டிய மன்பிஜ் நகருக்குள் அந்த நாட்டு ராணுவம் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த மாதம் நுழைந்தது. குர்துகளின் அழைப்பை ஏற்று, அந்த நகருக்குள் நுழைந்ததாக சிரியா ராணுவம் தெரிவித்தது.

இந்த நிலையில், சிரியா ராணுவத் துக்கு ஆதரவாக ரசிய ராணுவ காவல் துறையினர் மன்பிஜ் நகரில் நிறுத்தப் பட்டுள்ளதாக தற்போது அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner