எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாரிஸ், டி. 6- பிரான்ஸில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்துவதற்கு எதிராக நடைபெற்ற தீவிர போராட்டங் களையடுத்து, அந்தத் திட்டத்தை தற் காலிகமாக நிறுத்திவைப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்சு பிரதமர் எடோவார்ட் பிலிப் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மஞ்சள் அங்கி போராட் டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரிகளை உயர்த்தும் திட்டத்தை அரசு நிறுத்தி வைக்கிறது.

அந்த எரிபொருள்களுக்கான வரி, இன்னும் 6 மாதங்களுக்கு அதிகரிக்கப் படாது. மேலும், எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கு ஏற்கெனவே அறிவிக் கப்பட்டிருந்த விலையுயர்வு, ஜனவரி 1-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது.

வரி விதிப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, நாடு அபாய நிலைக்குக் கொண்டு செல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

காற்று மாசைக் குறைத்து, பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசல்க ளுக்கான வரியை மேக்ரான் அரசு அதி கரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் பெட்ரோலின் விலை 23 சதவீதம் அதிகரித்து, ஒரு லிட்டர் விலை 1.51 யூரோவாக (சுமார் ரூ.121) ஆகியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்ப்பின் அடையாளமாக, ஒளிரும் மஞ்சள் மேலங் கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், மஞ்சள் அங்கி போராட்டம் என்றழைக்கப்படு கிறது.

வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், மூன்றாவது வார மாக கடந்த 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் மிகவும் தீவிரமடைந்தது. அப்போது நடைபெற்ற போராட்டங்களின்போது தீவைப்பு போன்ற வன்முறைச் சம்ப வங்கள் அதிக அளவில் நடைபெற்றன.

இதில், 23 பாதுகாப்புப் படையினர் உள்பட 133 பேர் காயமடைந்தனர். இந்தப் போராட்ட வன்முறை தொடர் பாக இதுவரை 412 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன.

இதையடுத்து, எந்தக் காரணத்துக்காக வும் வன்முறையில் ஈடுபடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று பிரான்சு அதிபர் இமானுவல் மேக்ரான் எச்ச ரிக்கை விடுத்தார்.

மேலும், வன்முறையைக் கட்டுப் படுத்துவதற்காக அவசர நிலையை அறி விப்பது குறித்து பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் கேஸ்டனெர் கூறியிருந்தார். எனினும், அவசர நிலை அறிவிக்கும் திட்டமில்லை என்று உள்துறை இணையமைச்சர் லாரென்ட் நியூனெஸ் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த நிலையில், வரி உயர்வுத் திட்டத்தை நிறுத்திவைப்பதாக பிரான்சு அரசு தற்போது அறிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner