எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்பு

இசுலாமாபாத், டிச. 5- பாகிஸ் தான், சீனா கூட்டு போர் பயிற் சியில் இரு நாட்டு விமான படைகளும் பங்கேற்றுள்ளன. பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு இருந்து வருகிறது.

இரு நாடுகள் இடையே பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப் பும் மிக ஆழமாக உள்ளது. மேலும், புதிதாக சீனா, பாகிஸ் தான் பொருளாதார வழித்தடம் என்ற உள்கட்டமைப்பு திட் டம் நிறைவேற்றப்படுகிறது.

இரு நாடுகளும் கூட்டாக போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.

பாகிஸ்தானின் புதிய பிரத மராக பதவி ஏற்றுள்ள இம்ரான் கான், கடந்த மாதத்தின் தொடக் கத்தில் சீனாவுக்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டார். அப் போது அவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன பிரதமர் லீ கெகியாங் கையும் இம்ரான்கான் சந்தித்து, இரு நாடுகள் இடையேயான உறவை பலப்படுத்தும் வழி முறைகள் குறித்து விவாதித்தார். மேலும், சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அது மட்டுமின்றி, நிதி நெருக்கடியில் தத்தளித்து வரு கிற பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் அளிக்க சீனா முன் வந்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தா னின் கராச்சி நகரில் அமைந் துள்ள விமானப்படை தளத்தில் ‘ஷாகீன்-7’ என்னும் பாகிஸ் தான், சீனா கூட்டு போர் பயிற்சி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கியது.

இதில் இரு நாடுகளின் போர் விமானங்கள், ‘அவாக்ஸ்’ விமானங்கள் கலந்துகொண்டுள் ளன. மேலும், இரு தரப்பு விமானப்படை வீரர்களுடன் போர் விமானங்களை இயக்கு கிற விமானிகள், வான் பாது காப்பு கட்டுப்பாட்டாளர்கள், தொழில் நுட்பக்குழுவினர் ஆகியோரும் இந்தப் பயிற்சி யில் கலந்து கொண்டிருக்கிறார் கள்.

இது இரு நாட்டு விமானப் படைகளின் 7-ஆவது கூட்டு போர் பயிற்சி ஆகும். 6-ஆவது கூட்டு போர் பயிற்சி, சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

7-ஆவது கூட்டு போர் பயிற்சி எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்பட வில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner