எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், அக். 12- அமெரிக்கா வில் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலுக் குப் பிறகு, வட கொரிய அதி பர் கிம் ஜோங்-உனைச் சந்திக்க விருப்பதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து தலைநகர் வாசிங்டனில் அவர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது:

அதிபர் கிம் ஜோங்குடனான பேச்சுவார்த்தைகளை பாதியில் விட முடியாது. தேர்தல் முடிவ டைந்ததும் நான் அவரை நிச்ச யம் சந்திப்பேன்.

எங்களது இரண்டாவது சந் திப்புக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணி இறுதிக் கட் டத்தை அடைந்துள்ளது. தற் போது 3 அல்லது 4 இடங்கள் பரிசீலனையில் உள்ளன.

பெரும்பாலும், முதல் சந் திப்பு நடைபெற்ற சிங்கப்பூரில் எங்களது 2-ஆவது சந்திப்பு இருக்காது.

மேலும், எங்களது சந்திப்பு அமெரிக்காவில் நடைபெறு வதற்கும் வாய்ப்புள்ளது. வட கொரியாவில் கூட நாங்கள் சந்திக்கலாம் என்றார் டிரம்ப்.

தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவு கணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.

இதனால், வட கொரியாவுக் கும், அமெரிக்க, -தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.

இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட் டது.

அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந் திப்புகள் இரண்டு முறை நடை பெற்றது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை யும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூ ரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, கொரிய தீபகற் பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலை வர்களும் கையெழுத்திட்டனர்.

எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவ தில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக் காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியா வும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner