எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புனோம் பென், ஜூலை 31- தென் கிழக்காசிய நாடுகளில் ஒன் றான கம்போடியாவில் பிரதமர் ஹூன் சென், தன் பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை நடத்த தீர்மானித்தார். இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்தது.  இதைத்தொடர்ந்து கம்போடியா நாடாளுமன்றத் துக்கு நேற்று தேர்தல் நடை பெற்றது. கம்போடியா தேசிய மீட்பு கட்சி உள்பட பல்வேறு கட்சி களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக் குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடை பெற்று வருகிறது.

33 ஆண்டுகாலம் பிரதமராக பதவி வகித்த ஹூன் சென் இந்த தேர்தலிலும் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்று வார் என அவரது ஆதரவாளர் கள் திடமாக நம்புகின்றனர். 100-க்கும் அதிகமான தொகுதி களில் ஆளுங்கட்சியான கம் போடிய மக்கள் கட்சி வெற்றி பெறும் என அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். பிரதமரை எதிர்த்து தேர்தல் களத்தில் மிகச்சிறிய கட்சிகள் மட்டுமே காணப்படுவதாகவும், அவர்களுக்கும் பிரச்சாரத்துக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வில்லை என்றும், ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும் வாக்குப்பதிவில் தில்லுமுல்லு நடந்ததாகவும் எதிர்க்கட்சியி னர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இந்த தேர் தல் முடிவையும், கம்போடிய மக்கள் கட்சியின் வெற்றி பிரக டனத்தையும் சர்வதேச சமுதா யம் ஏற்கக் கூடாது என்றும், முற்றிலும் நிராகரிக்கப்பட வேண் டும் என்றும் எதிக்கட்சியான கம்போடிய தேசிய மீட்பு கட்சி வலியுறுத்தி உள்ளது. ஜூலை 29, 2018 கம் போடிய ஜனநாயகம் மறைந்த நாள், சமீபத்திய வரலாற்றில் புதிய கருப்பு நாள் என்று அக் கட்சியின் துணை தலைவர் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner