எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கின்ஷாசா, ஆக.9 மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதிபர் ஜோசப் கபிலா தலைமையிலான ஆட்சி நடை பெற்று வருகின்றது. அதிபருக்கு எதிராக அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் கைது செய்து அடைக்கப்படுவதும், பின்னர் சிறைகளை உடைத்து அவர்கள் தப்பிப்பதும் அங்கு வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது.

இந்நிலையில், முக்கிய கிளர்ச்சிக் குழுவான பி.டி.கே., கின்ஷாசா நகரில் உள்ள சிறையை உடைத்து அங்குள்ள தனது ஆதரவாளர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும், கிளர்ச்சி யாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

மோதல் கலவரமாக மாறிய நிலையில், கிளர்ச்சியாளர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 பேர் கொல்லப்பட்டதாக தக வல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோதலில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் இதே சிறையில் பி.டி.கே., நடத்திய சிறை உடைப்பு சம்ப வத்தில் இக்குழுவின் தலைவர் உள்பட 4000 கைதிகள் தப்பித்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner