எழுத்துரு அளவு Larger Font Smaller Fontகராகாஸ், மே 5 வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ பல்லாயிரக்கணக்கானோரின் எதிர்ப்புகளுக்கிடையில் புதிய அரசியல் சாசன வரைவுப் பணியை தொடங்கியுள்ளார்.

அதிபர் மடுரோவின் சர்வாதி கார ஆட்சியை எதிர்த்து ஆயிரக் கணக்கானோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களின் போது நிகழும் வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்தச் சூழலில், வெனிசூலாவுக்கென புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கப் போவதாக அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தப் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன.

ஜனநாயகத்துக்கு எதிராக, அத்தகைய நடவடிக்கையில் ஈடு படக் கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அதிபர் மடுரோவை வலியுறுத்தின.

எதிர்ப்புகளையும் மீறி, புதிய அரசியல் சாசனம் உருவாக்கினால், வெனிசூலா அரசுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா புதன்கிழமை (மே 3) எச்சரிக்கை விடுத்தது.

இந்தச் சூழலில், கடும் எதிர்ப்புகளையும் மீறி புதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளை மடுரோ தீவிரப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நமது அரசியலமைப்பின் சபைக்கு தற்போதைய தேவை வன்முறைக்கு எதிரான வலிமையான அரசியல் சாசனமே. எனவே, புதிய அரசியல் சாசனம் நிச்சயம் உருவாக்கப்படும்‘ என்றார். அதிபரின் இந்த முடிவுக்கு எதிராக, தலைநகர் காரகாஸில் நடைபெற்ற கண்டப் பேரணி நடைபெற்றது.

எனினும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி போன்ற அடக்கு முறைகளைக் கையாண்டும் போராட்டக் காரர்களை பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பிரிவினரும், காவல்துறையினர் வாகனங்களை எரித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு நாளில் மட்டும் 4 பேர் வன்முறைக்குப் பலியாகினர்.

அதிபர் மடுரோவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவுறும் நிலையில், அவர் தொடர்ந்து அதிபராக இருப்பதை உறுதி செய்வதற்காகவே புதிய அரசியல் சாசனம் எழுதப்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner