எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தலாய்லாமாவை எதிர்க்கும் சீனா

பொருளாதாரம், ராணுவம், மக்கள் தொகை எனப் பல வகைகளில் வலிமை யான நாடு சீனா. ஆனாலும், ‘தலாய் லாமா, என்று  உச்சரித்தாலோ, ‘ஜூன் 4' என்கிற தேதியைக் கேட்டாலோ, சீனா அஞ்சுகிறது.

அது என்ன ஜூன் 4

1989 ஜூன் 4ஆ-ம் தேதி, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக் கத்தில், சீன அரசுக்கு எதிராகப் போராட அந்த நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மீது ‘புல்டோசர்' ஏவி நூற்றுக்கணக்கான இளைஞர்களை அவர்களின் சொந்த நாட்டு அரசாங்கமே ஈவிரக்கமின்றி படு கொலை செய்து போராட்டத்தை நசுக் கியது. இப்போதும்கூட எங்கே தங்கள் மக்களுக்கு அந்த நாள் நினைவுக்கு வந்து விடப் போகிறதோ என்று சீனா அஞ்சிக் கொண்டு இருக்கிறது.

தியானன்மென் சதுக்கத்துக்கு இணை யான அதை விடவும் நூறு மடங்கு அதிகம், கலவரத்தை உண்டு பண்ணுகிற இன்னொரு சொல். -

திபெத் நாட்டை ஆக் கிரமித்த சீனா, அந்த நாட்டு ஆன்மிகத் தலைவரான ‘தலாய் லாமா' (14) என்கிற புத்த மதத் துறவியைக் கண்டு குலை நடுங்குகிறது.

பவுத்தர்கள் பின்பற்ற வேண்டிய வாழ் வியல் நெறிமுறைகளை விளக்கிச் சொல் லும் ‘காலசக்ரா போதனைகள்' எனும் நிகழ்ச்சி பிகாரின் புத்த கயாவில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதை புத் தாண்டு வாழ்த்துச் செய்தியில் தலாய் லாமா உறுதி செய்தார்.

எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிற திபெத்திய மக்களை சீனா மிரட்டுகிறது. நேபாளம் செல்கிற திபெத்திய மக்கள், அவர்களின் பயணங் களை ஜனவரி 10 வரை ரத்து செய்யு மாறு கேட்டுக் கொண்டு இருப்பதாக நேபாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2016 நவம் பர் மாதம் முதலே பல திபெத்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் சீன அரசால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன.

சீன அரசின் மிரட்டல் காரணமாக

7000-க்கும் மேற்பட்ட திபெத்தியர், நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளாமல் திரும்பிவிட் டனர். உலகம் முழுதும் அங்கீகரிக்கிற, பெரிதும் மதிக்கிற ஒரு துறவி, பகை மையை வளர்க்கிறார் என்று குற்றம் சுமத் துகிற சீன அரசு, அதே வேளையில் வேறு ஒரு செயலிலும் இறங்கி இருக்கிறது.

பாகிஸ்தானில் (பதுங்கி) உள்ள மசூத் அசார் என்கிற தீவிரவாதிக்கு எதிரான விவாதம் கூட நடைபெறா வண்ணம், அய்.நா. பாதுகாப்பு சபையில் தடுத்து நிறுத்தி இருக்கிறது. புத்த மதத் துறவி தலாய் லாமாவை எதிர்க்கிற சீனாவுக்கு, உலகமே அஞ்சுகிற தீவிரவாதியை ஆதரிக் கிற வக்கிர மனப்பான்மை ஏன் தோன் றியது...?

இரண்டுக்குமே காரணம் - இந்தியா. நம் மீதான அடிப்படையற்ற காழ்ப்புணர்வு தான், சீனாவை தடம் புரள வைத்து இருக் கிறது. திபெத்தியர்களின் உரிமைகளை மதித்து, அவர்களின் ஆன்மிக வழிகாட்டி யான தலாய் லாமாவுக்கு நாம் புகலிடம் தந்துள்ளதால் நம் மீது சீனாவுக்கு உள்ள கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

‘நல்லதுக்குக் காலம் இல்லை..' என்ப தற்கு சாட்சியம் கூறிக் கொண்டு இருக் கிறது - திபெத்திய மக்களின் போராட்டம். அவர்கள் சந்திக்கிற மற்றும் ஒரு சவால் -புத்தகயாவில் நடைபெறும் ‘காலசக்ரா போதனைகள்'. காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. என்றேனும் ஒரு நாள் விடியாமலா போய்விடும்...?

.
 
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

Security code
Refresh

Banner

Banner
Banner