எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வெள்ளை மாளிகை: முக்கிய பதவிக்கு
இந்திய அமெரிக்கர் ராஜ் ஷா நியமனம்

வாஷிங்டன், ஜன.6 அமெரிக்கா வின் புதிய அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது துணை உதவியாள ராகவும், தகவல் தொடர்பு மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக வும் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ராஜ் ஷா என்பவரை நியமித்துள்ளார்.

ராஜ் ஷாவின் பெற்றோர் குஜராத்தைச் சேர்ந்தவர்களாவர். மும்பையில் வசித்து வந்த அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடி யேறினர். ராஜ் ஷாவின் தந்தை மேல்படிப்புக்காக கடந்த 1970-களில் அமெரிக்கா வந்தார். பின்னர் இந்தியா திரும்பினார். திருமணத்துக்குப் பின் அவரும், அவரது மனைவியும் அமெரிக்கா வின் சிகாகோ நகரில் வசித்தனர். பின்னர் அவர்கள் கனக்டிகட் நகரில் குடியேறினர். அங்குதான் ராஜ் ஷா பிறந்து, வளர்ந்தார்.

அவர் தற்போது குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவில் ஆராய்ச்சிப் பிரிவு தலைவராக உள்ளார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக ஆய்வு மேற்கொண்ட நிபுணர் குழுவுக்கு அவர் தலைமை தாங்கி நடத்தி னார். அதிபர் தேர்தலின்போது ஹிலாரிக்கு எதிராக நடைபெற்ற அனைத்துப் பிரசாரத்துக்கும் ராஜ் ஷாதான் பின்னணியில் இருந்தார்.

வெள்ளை மாளிகையின் முக் கியப் பொறுப்புக்கு அவரை நியமிக்கும் அறிவிப்பையும், வேறு சில நியமனங்கள் தொடர் பான அறிவிப்புகளையும் அதிபர் மாளிகை ஊழியர் குழுவின் தலைவர் ரீன்ஸ் பிரீபஸ் வெளியிட்டார்.

இது தொடர்பாக ரீன்ஸ் கூறு கையில், “அதிபராகத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள டிரம்ப்பின் செயல் திட்டத்தை அமல்படுத்துவதில் இவர்கள் உதவியாக இருந்து, உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவார்கள்’ என்று தெரிவித்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner