Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி மருத்துவமனை பெரியார் மணியம்மை குழந்தைகள் பிரிவு: முதல் அமைச்சரின் ஆணைக்கு நமது நன்றி!

திருச்சியில் உள்ள கி.அ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 44 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் பெரியார் ஈ.வெ.ரா. மணியம்மை குழந்தைகள் நலப் பிரிவு EVRM Medical Ward என்ற பெயரை மாற்றம் செய்து, வெறும் குழந்தைகள் நலப் பிரிவு என்றுதான் இனி அழைக்கப்படல் வேண்டும் என்ற ஆணை (கடந்த  4ஆம் தேதி ஜூன் 2012) வழங்கப்பட்டதைக் கண்டித்து எழுதி இருந்தோம். *(7.6.2012)  முதல் அமைச்சர், அறிஞர் அண்ணா அவர்களிடம் இந்த குழந்தைகள் நலப் பிரிவுக்கு 1 லட்ச ரூபாய் பெரியார் அறக் கட்டளையிலிருந்து அய்யா அவர்களால் நன்கொடையாக அளிக்கப்பட்டு, பிறகு அண்ணா முதல் அமைச்சர்  அவர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.  மொத்தம் 9 அமைச்சர்கள் முன்னிலையில் அய்யா அம்மா பெயர்களை அறிவித்து மகிழ்ந்ததை நாம் எழுதியிருந்தோம்.

அத்துடன் இந்த மாதிரி தேவையற்ற, சர்ச்சையைக் கிளப்பும் இந்த ஆணை முதல் அமைச்சரின் தகவலுக்கே போகாமல் செய்யப்பட்டிருக்கக் கூடும் என்பதால் முதல் அமைச்சரின் கவனத்துக்கு என்று எழுதி இந்தஆணையை ரத்து செய்து (Restore Status quo Ante) என்பதை வேண்டுகோளாக வைத்திருந்தோம்.

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களின் கவனத்திற்குச் சென்று உடனடியாக இதற்குப் பரிகாரம் தேடப்பட்டு,   பழைய ஆணை ரத்து செய்யப்பட்டு, புது ஆணை பழைய பெயராலேயே கட்டாயம் அழைக்கப்படல் வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

மாண்புமிகு முதல் அமைச்சருக்கு நமது நன்றியைத் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டமைக்குப் பாராட்டையும் தெரிவிக்கிறோம்.

இனி இதுபோன்ற ராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகளையும் சரியான கண்டிப்புக்கு ஆட்படுத்துதலும் அவசியம் ஆகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி. வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh