எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம் ஆத்தூர் அருகில் பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த தளவாய்ப்பட்டி கிராமத்தில் நடைபெற்றுள்ள - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 11 வயது நிறைந்த இராஜலட்சுமியின் படுகொலை - மனிதத்தன்மையே கடு களவும் இல்லாத ஒரு மிருகத்தின் கீழ்த்தரமான செயலாகும்.

கோழியைக் கழுத்தறுத்துக் கொல்லுவதுபோல, பெற்றோர் முன்னிலையிலே இந்தக் காட்டுமிராண்டித்தனம் நடந்திருக்கிறது என்பது மகாமகா கொடுமையானதாகும்.

இதற்குக் காரணமான கொடூரனையும், துணை நின்ற குடும்பத்தினரையும்  வழக்குக்குள் கொண்டு வந்து எவ்வளவு விரைவில் தண்டனையைப் பெற்றுத்தர முடியுமோ அந்தளவு, விரைந்து காவல்துறை செயல்படவேண்டும்.

ஜாதியை முன்னிறுத்தி அரசியல் களமாடுவோர் யாராக இருந்தாலும், அவர்களும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களே ஆவார்கள்!

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பக்கம் அப்பகுதி கழகத் தோழர்கள் வலுவாக நின்று, ஆதரவுக்கரம் நீட்டுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் அந்த மாவட்டத்தில் நடை பெறவும் ஆவன செய்யப்படும்.

 

கி.விரமணி,

தலைவர்  திராவிடர் கழகம்.

சென்னை

7.11.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner