எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீதிமன்றத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது

ஆளுநர் புரோகித் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையில்லை

நக்கீரன் ஆசிரியர் நண்பர் கோபால் அவர்களை கைது செய்து எடுத்த சட்ட நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல என்று நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது மிகவும் வரவேற்கத்தக்கது. சட்டப்பூர்வமான நீதி வழங்கப்பட்டிருக்கும் சரியானதொரு நடவடிக்கை.

இந்த வழக்கு - அவருக்கு எதன் அடிப்படையில் கைது செய்கிறோம் என்று முறைப்படி தெரிவிக்காமலேயே, ஆளுநர் மாளிகை ஆணைப்படி என்று தமிழக அரசின் காவல்துறை கூறியுள்ளது சற்றும் ஏற்கத்தக்கதல்ல என்று நாம் நமது அறிக்கையில் முன்பே கூறியிருந்தோம்.

பிரிவு 124 இதில் ஏற்கத்தக்கது அல்ல எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து அவரை விடுதலை செய்துவிட்டது நீதிமன்றம்.

ஆளுநர் புரோகித் அவர்கள் பதவியில் நீடிக்க தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், எவ்வித உரிமையும் இல்லை. அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப அழைக்க வேண்டியது அவசர அவசியம்.

கி.வீரமணி,

திராவிடர் கழகம்.தலைவர்

9.10.2018

சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner