எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்பே' என்று வாஞ்சையுடன் அழைக்கும் நமது முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முழுநலம் பெற்று வெளிவருவதற்கு சில நாள் பிடிக்கலாம்.

நாளும் நலம் பெற்று, பலம் பெற்று வருகிறார். அவர் அடித்தட்டு மக்கள் உள்பட அனைவரது உள்ளம் கவர்ந்த தலைவர். அவரது முதுமை வயது, தொற்றுநோய் காரணமாகவே காவேரி மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு, மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்களின் கண்காணிப் பில் உடல்நலம் தேறி நாளும் முன்னேறி வருகிறார்.

இதற்கிடையில் இந்த அதிர்ச்சி, மனவேதனை, மன அழுத் தத்தில் கழக உடன்பிறப்புகள் சிலர் மறைவுற்றார் கள் என்பதை அறிய இரத்தக் கண்ணீர் வருகிறது. இம்மாதிரி முயற்சிகளில் அருள்கூர்ந்து ஈடுபடாதீர்கள்.

தி.மு.க. செயல் தலைவர் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோளை ஏற்று, எவரும் அதிர்ச் சியோ, தற்கொலை முயற்சியிலோ ஈடுபடாமல் பொறுமையுடன் காத்திருங்கள் கலைஞரைச் சந்திக்க. கவலை வேண்டாம் - காரணம், காலத்தை வென்ற தலைவர் அவர்!

நேற்றிரவு கலைஞர் அவர்களின்  உடல் நிலையில் மேலும் முன்னேற்றமாக அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். முதலில் மருத்துவர்கள் அவரை படுக்கையில் சிறிது நேரம் அமரவைத்தனர். அதன் பிறகு அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்து சிறிது நேரம் பயிற்சிகள் அளித்தனர் என்ற தகவல் நம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

எந்த எதிர்நீச்சலிலும் வெற்றி பெற்ற ஏந்தல் அவர்!

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

2.8.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner