எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருவாரூர் திராவிடர் கழக மேனாள் தலைவரும், ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலருமான ஆசிரியர் பொன். இராமையா அவர்கள் (வயது 75), திருவாரூரையடுத்த விளமலில், அவர் இல்லத்தில் இன்று (ஏப்.7) அதிகாலை மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

கீழ்வேளூர் பகுதியில் தந்தைபெரியார் தன்மானப் பேரவையை (1961) தொடங்குவதில் (அரசுப் பணியாளர்களுக்கானது) முக்கியமானவராக இருந்தவர். ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே பெரியார் கொள்கைப் பரப்புப் பணியில் தன்னை  ஒப்படைத்துக் கொண்டவர். ஓய்வுக்குப் பிறகு திருவாரூர் நகரக் கழகத் தலைவராக இருந்து பணியாற்றியவர். அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர்,

திராவிடர் கழகம்

குறிப்பு: மறைந்த பொன். இராமையா அவர்களுக்கு சந்திரா என்ற வாழ்விணையாரும் இரு மகள்களும், இரு மகன்களும் உண்டு. இன்று மாலை இறுதி நிகழ்ச்சிகள் விளமலில் நடைபெறும். தொடர்புக்கு: 9486912541.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner