எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாட்டின் எழுச்சியை அணையாமல் காப்போம்!

கழகத் தோழர்களுக்கும் -  இன உணர்வாளர்களுக்கும்

ஓர் அன்பு வேண்டுகோள்!

தந்தை பெரியார் சிலையை உடைக்கத் தூண்டுதல் செய்த வர்கள் தமிழ்நாட்டு மக்களின் - ஏன் உலகெங்கும் உள்ள பகுத்தறிவாளர்களின், நல்லுணர்வாளர்களின் எழுச்சி கண்டு - எதிர்ப்புக் கண்டு அஞ்சி நடுங்கி, ஒடுங்கி வருத்தம் தெரிவித்துள்ளனர். ஒரு 24 மணிநேரத்தில் இந்தியாவே பதற்றம் கொண்டது சாதாரணமானதல்ல; எதற்கும் வாய்த் திறக்காத பிரதமர் மோடியே 24 மணிநேரத்தில் வாய்த் திறந்துள்ளார்.

என்றாலும், அந்த எச்.ராஜா என்ற வாய்க்கொழுப்பு வக்கிர மத்தின் திமிர் இன்னமும் அடங்கியதாகத் தெரியவில்லை; ஒட்டன்சத்திரத்தில் தந்தை பெரியார்பற்றித் தவறான தகவலை ஒரு பேட்டியின்மூலம் தெரிவித்துள்ளார். அவர்கள் திருந்தப் போவதில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. வம்பையும் விடப்போவதில்லை.

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியதென்ன?

தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதால்,

திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்திய தால்,

நாம் அடங்கி விட்டோமா?

ஆர்த்து எழுந்துவிட்டோமா என்பதைக் காட்டவேண்டாமா?

அதை அமைதி வழியில், அறவழியில் ஒன்றுபட்டுக் காட்டு வோம்.

மாவீரர் லெனின் சிலை, அண்ணல் அம்பேத்கர் சிலை, தந்தை பெரியார் சிலை என்று குறி வைக்கும் அந்தக் கோணல் புத்திக்காரர்கள் - வெளியில் கூறாவிட்டாலும் அதே உணர்வோடு இருக்கக்கூடிய ஆதிக்க மதவாத சக்திகளுக்கு, சமூகநீதி அழிப்பு சக்திகளுக்கு அறிவார்ந்த முறையில் உணர்த்த வேண்டாமா?

எழுந்துள்ள தமிழ்நாட்டு எழுச்சியை அணையாமல் காக்க வேண்டாமா?

அதன் குறியீடாக வரும் 11.3.2018 ஞாயிறு மாலை தந்தை பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை உள்ள முக்கிய ஊர்களில்,

அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள், உணர்வாளர்களை ஒருங்கிணைத்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டுகிறோம். அதிக தூரம்கூட தேவையில்லை.

அறிவு ஆசான் தந்தை பெரியார், மாவீரர் லெனின், அண்ணல் அம்பேத்கர் ஆகிய முப்பெரும் புரட்சியாளர்களின் உருவப் படங்களையும் ஏந்திச் சென்று கீழ்க்கண்ட முழக் கங்களை மட்டும் ஒலித்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1. ஜாதியை ஒழிப்போம் - சமதர்மம் படைப்போம்

2. மதவெறி மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்!

3. பெண்ணடிமை தகர்ப்போம் - பேசும் பெண்ணுரிமை காப்போம்!

4. மூடநம்பிக்கைகளை ஒழிப்போம் - பகுத்தறிவை வளர்ப் போம்!

5. பேதமற்ற சமுதாயம் படைப்போம்! படைப்போம்!!

தந்தை பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பீர்!

- கி.வீரமணி,

தலைவர்,      திராவிடர் கழகம்

சென்னை

8.3.2018


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner