எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நமது பேரன்பிற்குரிய மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாண்பமை - ஜஸ்டீஸ் எஸ்.ரத்தினவேல் பாண்டியன் (வயது 89) அவர்கள் இன்று (28.2.2018) காலை காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், தாங்கொணாத துயரமும் அடைந்தோம்!

திராவிடர் இயக்கத் தொட்டிலில் வளர்ந்து, திறமை மிக்க வழக்குரை ஞராகி, அரசியல் களத்தில் சிறிது காலம் தொண்டாற்றி, பிறகு கலைஞர் ஆட்சி யில், மாநில குற்றவியல் தலைமை வழக்குரைஞராகி, பிறகு உயர்நீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி, மத்திய அரசு பணியாளர் 5ஆவது ஊதியக் கமிஷன் தலைவர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை ஏற்று முத்திரை பதித்தவர்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய முதுபெரும் தலைவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். நம்மிடம் தனி அன்பு காட்டியவர். மண்டல் கமிஷன் வழக்கில் 9 நீதிபதிகள் தீர்ப்புரையில், தனித்தன்மையுடன் தனியே எழுதி, அதில் தந்தை பெரியார் பற்றி  சமூக நீதி காவலர் பிரதமர் வி.பி.சிங், நாடாளுமன்றத்தில் பேசியதை மேற்கோளாக எடுத்துக்காட்டி பதிவு செய்த சமூகநீதி சரித்திரம் படைத்த சான்றோர் ஆவார்.  பெரியார் திடலில், நீதிக்கட்சி நூற்றாண்டு விழாவில் அவரை அழைத்து நாம்சிறப்பு செய்து பாராட்டிய போது - அவர் ஆற்றிய நன்றியுரை சிறப்புமிக்கது. அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல. நமது திராவிடர் சமுதாயத்திற்கே பேரிழப்பாகும். அவருக்கு நமது வீரவணக்கம்.!

அவரது பிரிவால் வாடும் அவரது மகன்கள், மகள்கள், குறிப்பாக நீதிபதி ஜஸ்டிஸ் திரு.சுப்பையா அவர்களுக்கும் நமது இரங்கல், ஆறுதல் உரித்தாகுக.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
28.2.2018தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner