எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நம் வாழ்வின் சிறந்த பயன் - நமக்கு மட்டும்  மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளுவது அல்ல.

மாறாக, மற்ற நண்பர்கள், மனிதர்களுக்கும் நாம் உதவி, அளவளாவி,  அன்பையும், பாசத்தையும் பெரு மழையாய்ப் பெய்து, இன்பக் குளியலை நடத்தி, நம் மகன்கள் மகிழ்ச்சியால் வழிய வேண்டுவதே! நமது மனக் கவலை மாற்றுவதற்கு மருந்து, நம்மிடம் அன்பும், கனிவும் கொண்ட மேன்மையான நமது நண்பர்கள் முதுபெரும் அறிஞர்கள், பெற்றோர்கள், நோயோடு போராடும் நொது மலர்கள் தலைவர்கள் ஆகியோரை அவ்வப்போது சந்தித்து "சிறிது நேரமாவது உரையாடி அவர்களுக்கு ஒரு புத்தெழுச்சி பாய்ச்சிட முன்வர வேண்டும்!"

தொலைக்காட்சிகளிலும் வெட்டிப் பேச்சு. வீண் விவாதங்களில் கால விரையம் செய்யாமல், அன்பிற் குரிய அருமை நண்பர்களைச் சந்தித்து மலர்ந்த நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது மிகவும் பலன் தரும் - இரு சாராருக்கும் (பார்த்தவருக்கும், பார்த்து உரையாடி நலம் விசாரித்துத் திரும்பும் நமக்கும்கூட!)

தலைசிறந்த மூத்த மருத்துவரான டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் மாதம் ஒரு முறையோ, இரு முறையோ, அவர்களுக்கு அறிமுகமான, வசதியற்ற நிலையில் நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் சிலரை நேரில்  சென்று  சந்திப்பார்; உரையாடுவார். ஆறுதல் கூறி, அடக்கமாக உதவி செய்து திரும்புவார்; அவருக்கு அதில் ஏற்படும் மன மகிழ்ச்சி வார்த்தைகளில் எளிதில் வர்ணித்து விட முடியாது! இவர் ஓய்வு பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியின் பெரும் மருத்துவமனை யின் முதல் நிலை மருத்துவர் இவருக்கு வயது 86.

அதுபோலவே நண்பர் பிரபல சிறுநீரியல் நிபுணர் (urologist) டாக்டர் ஏ. இராஜசேகரன் உடல் நலிவுற்று சிகிச்சைகளால் மீண்டு, வாழ்ந்து வரும் தனது இனிய நண்பர்களை (Periodically) தவறாமல் சென்று, மருத்துவம் மற்றும் உதவிகளைச் செய்து உரையாடி உற்சாகப்படுத்தி விட்டுத் திரும்புவார்!

அவரது தம்பியும், காவல்துறை தலைமை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவருமான நண்பர் ராஜ்மோகன் அய்.பி.எஸ். (ஓய்வு) அவர்கள் (அவருக்கு நேற்று முன்னாள் 80 வயது துவக்கம்) மாதம் தவறாமல், தனது முக்கிய நண்பர்கள் பட்டியலைத் தயாரித்து வைத்து அவர்களிடத்தில் தொலைபேசியில் நலம் விசா ரித்து உரையாடி - மகிழ்வார்; அவர்களை மகிழ்விப்பார்!

வயது மூத்த முதுபெரும் மாமனிதர்கள், 'நட்பு வட்டத்தின் நாயகர்களாக' நிற்பவர்கள் - இவர்களை ஆங்காங்கு காணும்போதும், சந்தித்து உரையாடும் போதும் கிடைக்கும் 'இன்பம்' எல்லையற்றது!  உடுக்கை இழந்தவன் கைபோல், இடுக்கண் களையும் உடனடி தாவிப்பாய்ந்து உதவும் கைம் மாறுவேண்டாத, கடப் பாடு உடைய, காலத்தை வென்ற கடமை வீரர்களைச் சந்திப்பதன் மூலம் அவர்கள் ஆயுளும் நீளுகிறது; நம் கவலைகள், மன அழுத்தங்கள் தீர்ந்து மேலும் நம் வாழ்வையும் நீட்டிட உதவுகின்றது!

தந்தை பெரியார் அவர்கள் பல முறை கூறியி ருக்கிறார். தான் எப்படி தனிப் பெரும் செல்வந்தர் வணிகர் என்ற நிலையிலிருந்து மாறி, பொது வாழ்வுக்கு வந்து, பொதுத் தொண்டு செய்து, பிறகு தொண்டு செய்த பழமானார் என்பதைக் கூறும்போது "எனது பால்ய சிநேகிதர்கள், நெருங்கிய நண்பர்கள் பலர் ஈரோட்டில், ஒருவர் பின்னால் ஒருவர் என்று மறந்து விட்டனர்; ஏறத்தாழ நான் நட்பு வட்டத்தினையே இழந்து விட்டதால் நாம் இதையே பெருக்கி நாடு முழுவதும் தொண்டு எஞ்சிய வாழ்வில் பணி செய்வோமே என்றுதான் பொது வாழ்வில் இறங்கினோம்!

'உயிர் காப்பான் தோழன்' என்பதன் உட்பொருள் விளங்குகிறதா? எனவே மேற்காட்டிய மேன்மையாளர் களால் 'மேலோர் மூவரை' மறக்காமல் சந்தித்து உரை யாடி அவர்களுக்கும் நமக்கும் தொல்லை தராத வண்ணம் செய்து ஈதல் இசைபட வாழ்தலை - வாழ்வி யலாக்கிக் கொள்ளுங்கள் - வளர்பிறையாகுங்கள் தோழர்களே!

('மேலோர் மூவர்' - 1.  நம்பிக்கைக்குரிய நண்பர்.

2.  உடல் நலிவுற்றோர்

3. முதுபெரும் அறிஞர்கள், தலைவர்கள் ஆகிய மூவரே மேன்மைக்குரியவர் என்பதே பொருள்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner