எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மி. நலவாழ்வுக்கு வைட்டமின்களைப்போல இதர மினரல்கள், மெக்னீஷியம் போன்றவைகளும் மிகவும் தேவை.

DNA என்ற மரபு அணுக்களை ஒருங்கிணைப் பதற்கும், இன்சுலின் உற்பத்தியாகும் வகையில் உடற்கூறு ஒழுங்குபடுத்தப்படவும் (Metabolism)  இந்த மெக்னீஷியம் பங்களிப்பு சாதாரணமானதல்ல; மிகவும் இன்றியமையாதது. இந்த மெக்னீஷியம் உடலில் அளவு குறைந்தால் இதனால் உடல் நோய்கள் வரும் சாத்தியம் அதிகமானது.

மெக்னீஷியம் குறைவினால் 'அல்ஷைமர்ஸ்' என்ற மறதி நோய், சர்க்கரை நோய், இதய நோய் போன் றவைகள் நம் உடலைத் தாக்கக் கூடும்.

வயது வந்தவர்கள் (Adults) க்கு இந்த மெக்னீஷியம் தாது சத்து ஆண்களுக்கு 400-420mg வரையும், பெண்களுக்கு 310-320 mg தேவைப்படக் கூடும் - நல்வாழ்வுக்கு.

நம்முடைய உணவின் மூலமாகவே இதனை உடலுக்குள் சேர்ப்பது தான் சிறந்த முறையாகும்.

1. சமைக்கப்பட்ட ஸ்பானாச் கீரை வகையறா -  ஒரு கப் - 157 mg

2. கறுப்பு சாக்லேட் (Dark Chocholate)  1 சதுரம் - 95 mg

3. பூசணி விதைகள் (Pumkkin  Seeds)  1 1/2 கப் - 92 mg

4. பாதாம் பருப்பு - 30 கிராம் - 75 mg

5. முந்திரிப்பருப்பு - 30 கிராம் - 74 mg

6. அத்திப்பழம் (Figs) - அரை கப் -  50  mg

7. பழுப்பு அரிசி சமைக்கப்பட்டது 100 கிராம் - 48 mg

8. கீரைகள் (வேக வைத்தவை) 100 கிராம் - 36 mg

9. கடுகு விதைகள் 1 கப் - 32 mg

10. வாழைப்பழம் ஒன்று - 32

இவைகளை வாய்ப்புள்ளவர்கள்  ஒரு நாள் ஒரு தரமாவது பசியோடு இருக்கும்போது சாப்பிடத் தவறாதீர். ஒரு டப்பாவில், போத்தலில் கூட இவைகளை வைத்துக் கொண்டு வாய்ப்புக் கிடைக்கும் போது பயன்படுத்த தவறாதீர்கள்.

II.  பாட்டி வைத்தியம் ஒன்று தெரிந்து கொள் கிறீர்களா?

சிறு காயங்கள் ஏற்படும்போது தேனைத் தொட்டு வைத்தால் உங்களுக்கு இதமாக இருக்கும் எரிச்சல், வலி குறையுமே!

III.  காதில் தொற்று ஏற்பட்டால் உடனே Anti Biotics  மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள், அது தேவை யில்லை. பற்பல நேரங்களில் தானே சில நாள் விட்டுப் பாருங்கள் சரியாகிவிடும். இன்றே வேறு சில வலி நிவாரணிகளைப் பயன்படுத்தாதீர்கள். நிவாரணம் கிடைக்கும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner